Connect with us
ramya krishnan

Cinema News

கமல்ஹாசனுக்காக அதை செய்தேன்!.. மத்தவங்களுக்கு நோ!.. ரம்யா கிருஷ்ணன் சொன்ன சீக்ரெட்..

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவருகிறார். இன்று வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது.

ஹீரோயினாக, வில்லியாக, அம்மனாக என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அசால்ட்டாக நடித்துவிடுவார். படையப்பா நீலாம்பரி, பாகுபலி ராஜமாதா, பஞ்சதந்திரம் மேகி உள்ளிட்ட சில கேரக்டர்கள் இவரை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என்றும் சொல்லும் அளவிற்கு அவரின் நடிப்பு இருக்கும்.

இதையும் படிங்க- 52 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆடும் ரம்யா கிருஷ்ணன்!.. இந்த அளவுக்க இறங்கி வேலை பார்ப்பாரு..??

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில், முதலில் நான் சினிமாவில் நடித்த போது, பல படங்கள் தோல்வியடைந்தது. அதன் பிறகு தெலுங்கில் ஒரு சில படங்கள் ஹிட்டானது. மீண்டும் ஒரு சில நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஒரு தெலுங்கு படத்தில் வில்லியாக நடித்தேன்.

அந்த சமயத்தில் எந்த ஹீரோயினும் வில்லியாக நடிக்க சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் எனக்கு நடிக்கலாம் என்று தோன்றியதால் நடித்தேன். அதை பார்த்துவிட்டு படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை நீலாம்பரி கதாப்பாத்திரம் பேசப்படுகிறது. நான் ஒரே அடியாக வெற்றிப் படங்களில் நடித்ததே இல்லை.

ஒரு சில படங்கள் வெற்றிபெறும். ஒருசில படங்கள் தோல்வி அடையும். எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடித்தேன். ஹீரோயினாக, துணை நடிகையாக, அம்மனாக, ஐடம் டான்சராக, வில்லியாக என எதுவாக இருந்தாலும் நடித்தேன்.

பஞ்சதந்திரத்தில் மேகி என்ற விலை மாது கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். அது கமல்ஹாசன் படம் என்பதால் மட்டும்தான் சம்மதித்தேன். இல்லையென்றால் நடித்திருக்கவே மாட்டேன் என்று ரம்யா கிருஷ்ணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- காலம்போன காலத்துல காவாலா கேட்குதா!.. தமன்னா ஸ்டெப்பை போட்ட ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ பாருங்க!…

author avatar
prabhanjani
Continue Reading

More in Cinema News

To Top