Connect with us
jailer

Cinema News

தலைவரு அலப்பர!.. கூஸ்பம்ப்ஸ்.. படம் வேற மாறி.. வேற மாறி!.. ஜெயிலர் டிவிட்டர் விமர்சனம்…

இன்றைக்கு திரையுலகமும் சரி ரஜினி ரசிகர்களும் சரி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர்தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு நடுவே இப்படம் வெளியாகியுள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் ஆகிய இருவருக்கும் ஒரு வெற்றி தேவைப்படுவதால் இப்படத்திற்காக இருவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

அதோடு, ஒருபக்கம் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருப்பதால் ஜெயிலர் படத்தின் வெற்றி மூலம் ரஜினி தன்னை யார் என நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணி வெளியாகியுள்ளது. ஆனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் ஜெயிலர் படம் 6 மணிகே வெளியானதால் பலரும் இப்படத்தை பார்த்து விட்டனர். படம் பார்த்தவர் டிவிட்டரில் இப்படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ டையலாக்கெல்லாம் போச்சா? வசனத்தை பேசி மொக்க வாங்கிய ரஜினி

ஜெயிலர் படம் கண்டிப்பாக ரஜினிக்கு ஒரு வெற்றிப்படம் எனவும், முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது. இது ரஜினி எனும் ஒன் மேன் ஷோ.. இண்டர்வெல் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் தெறியாக இருப்பதாகவும், மோகன்லாலும், ஷிவ் ராஜ்குமாரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு முதுகெலும்பாக இருப்பதாகவும், நெல்சனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படம் எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

twit

நெல்சன் தரமான சம்பவம் பண்னியிருக்கார்… இரண்டாம் பாதி வேற மாறி, வேற மாறி.. படத்தில் நிறைய சர்ப்பரைஸ் இருக்கிறது.. தலைவர் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து காத்திருக்கிறது.. க்ளைமேக்ஸ் வெறித்தனம்.. என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நாம் பல பல வருடங்களாக பார்க்காத காட்சியாக ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இருக்கிறது. தரமான சம்பவம்.. வேற மாறி நெல்சா’’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

twitt

மொத்தத்தில் படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இது படக்குழுவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரம், சில விஜய் ரசிகர்கள் ஜெயிலர் பட போஸ்டரை டிபியாக வைத்துகொண்டு ‘படம் நன்றாக இல்லை. படம் ஃபிளாப்’ என ஒரு பக்கம் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்சன் சம்பவம் பண்ணிட்டாரு!.. ஜெயிலர் ஃபர்ஸ்ட் ஆப் தெறிக்குது!.. ஃபயர் விடும் ரசிகர்கள்!…

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top