கமல், விக்ரம் பாணியை ஃபாலோ பண்ணும் விஜய் சேதுபதி.. இனிமே அப்படி செய்ய மாட்டாராம்..

Published on: August 12, 2023
vijay sethupathy
---Advertisement---

நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர், இப்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, இந்தியில் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக சல்மான் கான் படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க- மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..

அடுத்தடுத்து பல வித்யாசமான படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சமீப காலமாக மற்ற நடிகர்களின் படத்தில், வில்லனாக நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். மேலும் சமீப காலமாக விஜய் சேதுபதி சமீப காலமாக ஹீரோவாக நடித்த டிஎஸ்பி உள்ளிட்ட படங்கள் ஓடவில்லை.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இனி தமிழ் படத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளார் என்றும் அதுவும் ஹீரோவாக மட்டுமே நடிக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியானது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் செய்யாறு பாலு பல தகவல்களை கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். அதுவும் அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் 8 கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழில் ஏற்கனவே கமலஹாசன், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஒரே படத்தில், பல கெட்டப்பில் நடித்துள்ளனர். சிட்டிசன் படத்தில் அஜித் கூட அப்படி பல கெட்டப்பில் நடித்திருப்பார்.

அதே போல விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் 8 கெட்டப்பில் நடிக்க போகிறார். அந்த படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அந்த படம் வெளியானால், விஜய் சேதுபதி மீண்டும் மார்க்கெட்டை பிடித்துவிடுவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் மாஸ் வில்லனாக விஜய் சேதுபதி!.. இனிமே ஹீரோ அவ்வளவுதானா!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.