Connect with us
vijay sethu

Cinema News

மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..

பாலுமகேந்திராவின் சிஷ்யனான வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார்.

அடுத்து விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்ததோடு விருதுகளையும் பெற்றது. இதில் விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி என பலரும் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் இப்படம் வெளியாகி நல்ல வசூலையும் பெற்றது.

viduthalai

வெற்றிமாறனுக்கு ஒரு பழக்கம் உண்டு. இவ்வளவு நாள்தான் படப்பிடிப்பு என திட்டமிட்டெல்லாம் படப்பிடிப்பை துவங்க மாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது ஷூட்டிங் போவார். நடிகர்கள் அவருக்காக காத்திருக்க வேண்டும். சூரி இப்படித்தான் கடந்த 3 வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: மரணமாஸ் முத்துவேல் பாண்டியன்… தீயாக தெறிக்கும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வீடியோ..

விடுதலை படத்தை எடுத்தபோது நீளம் மிகவும் அதிகமாக இருந்ததால் விடுதலை 2 எடுக்கலாம் என்கிற எண்ணம் வெற்றிமாறனுக்கு ஏற்பட்டது. பல படங்களில் நடித்துவரும் மிகவும் பிஸியான நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறனிடம் மாட்டிக்கொண்டு முழித்தார். 15 நாள் கால்ஷீட் போதும் என அவரை அழைத்து மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடத்தினார் வெற்றிமாறன். இதனால் பல படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் சொதப்பலானது.

verimaran

தற்போது விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என திட்டமிட்டு வெற்றிமாறன் நடிகர்களை அழைத்துக்கொண்டு மலைக்கு மேலே போனாராம்.

அதன்பின் என்ன நினைத்தாரோ!. 15 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்த நிலையில் கீழே இறங்கி வந்துவிட்டார்களாம். மேலும், இன்னும் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். சூரிக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில், வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனால், விஜய் சேதுபதி நிலைமைதான் பாவம் என விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: கோடி கோடியாக கொட்டி கொடுத்த போர்த்தொழில்!… பணத்தை மூட்டை கட்டிய தயாரிப்பாளர்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top