Connect with us
porthozhil

Cinema News

கோடி கோடியாக கொட்டி கொடுத்த போர்த்தொழில்!… பணத்தை மூட்டை கட்டிய தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். சில தயாரிப்பாளர்கள் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து கையை சுட்டுக்கொண்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.

ஆனால், சில சமயம் மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் பல கோடிகளை தயாரிப்பாளருக்கு வசூலை வாரி கொடுத்துவிடும். கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி வெளியான திரைப்படம் ‘போர்த்தொழில்’. இப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: மரணமாஸ் முத்துவேல் பாண்டியன்… தீயாக தெறிக்கும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வீடியோ..

கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷனாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பெரிய விளம்பரங்களோ, புரமோஷனோ செய்யப்படவில்லை. திடீரெனத்தான் இப்படம் வெளியானது. தியேட்டரில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இப்படம் பற்றி பாராட்டி கருத்து தெரிவித்தனர்.

porthozhil

இதைத்தொடர்ந்து, இப்படத்திற்கு தியேட்டரில் கூட்டம் அதிகரித்தது. எனவே, தியேட்டரில் வசூலும் அதிகரித்தது. கடந்த சில வருடங்களாக சரத்குமார் ஹீரோவாக ஏந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கிவிட்டார். விஜயின் வாரிசு படத்திலும் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

அதேபோல், அசோக் செல்வனுக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்திற்கு பின் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பிரேக்கை கொடுத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வரதுவங்கியுள்ளது. ஒருபக்கம், சரத்குமாரும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ.30 கோடி லாபத்தை கொடுத்துள்ளதாம். இப்படத்தை இரண்டு பேர் இணைந்து தயாரித்திருந்தனர். எனவே, ஒருவருக்கு தலா ரூ.15 கோடி என இருவரும் பிரித்து கொண்டார்களாம்.

இதையும் படிங்க: இது எல்லாமே அவர பாத்து வந்திச்சி!. தளபதியின் அரசியலுக்கு விதை போட்ட அந்த நடிகர்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top