Cinema News
ரஜினி இப்படி ஆனதே அவங்களாலதான்!.. தம்பியை நினைத்து புலம்பிய சத்தியநாராயண ராவ்!..
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் 10ம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் யாரும், மது, சிகரெட் போன்றவற்றிற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க- பாலய்யாவுக்கும் ஜெயிலர்ல சீன் வச்சிருந்த நெல்சன்.. இது ரஜினி படமா!.. இல்லை நண்பர்கள் மாநாடா?..
நான் மட்டும் இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால், இன்னும் எங்கேயோ போயிருந்திப்பேன். இந்த பழக்கங்களால் பல பிரச்சனைகளை சந்தித்தேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானதற்கான காரணத்தை அவரது அண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த ரஜினியை அண்ணன் தான் வளர்த்தார் என்று அவரே பல முறை கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் அரசு பேருந்தில் நடத்துநர் பணியை விட்டுவிட்டு நடிக்க போகிறேன் என்று கூறிய போது, எல்லாரும் பயந்தார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் தான் தைரியமாக அனுப்பினேன்.
அதேபோல இன்று சாதித்துவிட்டார். ஆரம்பத்தில் நான் சரியாக கவனிக்கவில்லை. திடீரென பார்த்தால், கெட்ட நண்பர்களோடு பழகி, மது, சிகரெட் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தார். எல்லாரும் என்னை தான் திட்டினார்கள். தம்பியை இப்படி கெடுத்திவிட்டாயே என்று கூறினார்கள்.
நல்லதை சொல்லும் நண்பர்களை விட கெட்டதை சொல்லித்தரும் நண்பர்கள் தான் அதிகம். அதனால் தான் தீய பழக்கங்களை கற்றுக்கொண்டார். இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டார் என்று அந்த பேட்டியில் ரஜினியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- கே.பாலசந்தர் பேச்சை மீறி பாலிவுட் சென்ற ரஜினி.. கடுப்பாகி திரும்பி வந்தது இதனால்தான்..