Connect with us

Cinema News

பாலய்யாவுக்கும் ஜெயிலர்ல சீன் வச்சிருந்த நெல்சன்.. இது ரஜினி படமா!.. இல்லை நண்பர்கள் மாநாடா?..

ஜெயிலர் படத்தை பான் இந்தியா படமாக மாற்றும் நோக்கில் இயக்குநர் நெல்சன் பல மாநிலங்களில் இருந்தும் முன்னணி நடிகர்களை களமிறக்கி இருந்தார். கமல்ஹாசனின் விக்ரம் படம் மல்டி ஸ்டாரர்கள் படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல பொன்னியின் செல்வன் படமும் மல்டி ஸ்டாரர்கள் படமாக வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இந்நிலையில், அதே பாணியை படுமொக்கையான கதையை வைத்துக் கொண்டு பெரிய நடிகர்களையும் அவர்களின் மாஸ் காட்சிகளையும் நிரப்பி ஜெயிலர் படத்தை தேற்றி விடலாம் என ஐடியா செய்த நெல்சன் ரஜினிகாந்த் மூலமாகவே அவரது நண்பர்கள் பலரையும் அழைத்து இந்த படத்தில் நட்பு மாநாடு நடத்தியிருந்தது ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்புதான்! – ஜெயிலர் பார்த்திவிட்டு பொங்கி எழுந்த வனிதா..

சிவராஜ்குமார் மோகன்லால் சீன்கள்:

சிவராஜ்குமார், மோகன்லால் வரும் சீன்கள் எல்லாம் மாஸாக காட்டியிருந்தாலும், அவர்கள் வெறுமனே சில நிமிட கேமியோ ரோல்களாக போனது ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால், அந்த அந்த மாநிலத்தில் ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் வேலையை சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றனர்.

பாலகிருஷ்ணாவுக்கு போலீஸ் ரோல்:

அதே போல ஆந்திரா ரசிகர்களை கவர முதலில் பாலகிருஷ்ணாவை தான் இயக்குநர் நெல்சன் மைண்டில் வைத்திருக்கிறார். ரஜினிகாந்தின் இளமை கால ஃபிளாஷ்பேக் போர்ஷனில் பாலகிருஷ்ணாவையும் ஒரு டெரரான போலீஸ் அதிகாரியாக காட்டலாம் என பிளான் செய்திருந்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே படம் பெரிதாகவும் மல்டி ஸ்டாரர் படமாகவும் மாறிவிட்ட நிலையில், பாலய்யாவை அணுக வில்லை எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!.. குட்ட பாவாடையில் மொத்தமா காட்டும் விஜே பார்வதி!…

சொதப்பிய நெல்சன்:

அதற்கு பதிலாக டோலிவுட் நடிகர் சுனிலை வைத்து நெல்சன் பண்ண ஆந்திர மாநில க்ரீடம் கடத்தல் போர்ஷன் காமெடியாக வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்த்து வைக்கப்பட்ட நிலையில், படத்திலேயே அதுதான் மரண மொக்கையாக மாறி இரண்டாம் பாதியையே கெடுத்து விட்டது.

அதற்கு பதிலாக பாலய்யாவை வைத்து ஒரு மாஸ் சீன் வைத்திருந்தாலும், ஜெயிலர் படத்தின் செகண்ட் ஹாஃப் ரசிகர்களை இன்னமும் வெகுவாக கவர்ந்திருக்கும் என ரசிகர்கள் நெல்சன் பேட்டிக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் வசூலுக்கு முதல் ஆளாக வாழ்த்திய விஜய்!.. காக்கா – கழுகு கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top