ஒன்னுக்கொன்னும் சளைச்சது இல்ல! கமலின் சினிமா வாரிசு இவர்தானாம் – உயிரை கொடுத்து நடிச்சதுக்கு கிடைச்ச பலன்

Published on: August 15, 2023
kamal
---Advertisement---

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்களில் சிவாஜிக்கு பிறகு அந்த இடத்தை தக்கவைத்து கொள்பவர் நடிகர் கமல்ஹாசன். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் கமல். கதைக்கு ஏற்ற வகையில் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை மறைத்து எப்படிப்பட்ட கெட்டப் ஆனாலும் அதற்காக மெனக்கிட்டு நடிக்க கூடியவர் கமல்.

அந்த வகையில் சிவாஜிக்கு அடுத்து கமல் இருப்பதைப் போல கமலை அடுத்து அந்த இடத்தை நிரப்புபவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் கமலின் சினிமா வாரிசாக தனுஷை கூறுவது நியாயமாக இருக்குமா என கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : இதுக்கு பதில் அந்த மாறி படம் எடுத்து பொழைக்கலாம்- ப்ளூ சட்டை மாறனை பொளந்துகட்டிய இயக்குநர்

அதற்கு சித்ரா லட்சுமணன் கமலின் சினிமா வாரிசாக தனுஷை கூறுவது எல்லா விதத்திலும் பொருத்தமானதாகவே இருக்கும் என பதில் அளித்திருக்கிறார். தனுஷின் ஆரம்பகால படங்களை விட அவர் இப்போது தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வரும் படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

kamal1
kamal1

மேலும் சமீப காலமாக தனுஷின் நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி தெரிகிறது. தன்னுடைய அடையாளத்தை தனுஷ் மிகச் சரியாக நிரூபித்து வருகிறார். ஆகவே கமலுக்கு அடுத்தபடியாக அவருடைய சினிமா வாரிசாக தனுஷ் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : கொரோனா காலத்திலிருந்து இப்போதுவரை நிஜமாகவே ஓடிய படங்கள்!.. ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்!…

தனுஷின் சமீபகால படங்களான கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம், மற்றும் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் போன்ற படங்களை எடுத்துக் கொண்டாலே அவருடைய விதவிதமான பரிணாமங்கள் நம்மை வியப்படைய செய்கின்றது. ஆகவேதான் கமலின் அடுத்த வாரிசாக தனுசை சொல்வது மிகச் சரியாக இருக்கும் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.