சத்தியமா சொல்றேன்! இனிமே அந்த தப்ப பண்ணமாட்டேன் – வேற ரூட்டில் களமிறங்கும் அண்ணாச்சி

Published on: August 16, 2023
sarava
---Advertisement---

தொழில் அதிபர்களில் மிகவும் பிரபலமானவர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி. சென்னை மற்றும் பெரிய பெரிய நகராட்சிகளில் சரவணா ஸ்டோர் என்ற பெயரில் பல கிளைகளை நிறுவி அதன் மூலம் தன்னுடைய வியாபாரத்தை பெருக்கி வருகிறார். துணி கடையிலிருந்து பாத்திரக்கடை, மளிகை கடை ,பர்னிச்சர் கடை, நகைக் கடை என தன்னுடைய வியாபாரத்தை பரவி வைத்திருக்கிறார்.

லலிதா ஜுவல்லர் நிறுவனர் எப்படி தன்னுடைய கடை பிரமோஷனுக்காக தானே விளம்பரத்தில் நடித்து தன்னுடைய கடையை பிரபலப்படுத்தி வருகிறாரோ அதே பார்முலாவை பின்பற்றினார் நம்ம அண்ணாச்சி சரவணன். அதுவும் தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தமன்னா ஹன்சிகா ஆகியோர்களுடன் நடனமாடி ரசிகர்களை ஒரு வழியாக தன் பக்கம் இழுத்தார்.

Also Read

இதையும் படிங்க : காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

அவர் நடித்த அந்த விளம்பர படங்கள் மக்கள் மத்தியில் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஏன் படத்தில் ஹீரோவாக நடிக்க கூடாது என்ற எண்ணத்தையும் நம் அண்ணாச்சி மனதில் தோன்ற வைத்தது. அதன் விளைவு தான் அவர் நடிப்பில் வெளியான த லெஜெண்ட் என்ற படம்.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எண்ணி இருந்த அண்ணாச்சிக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை தந்தது. பார்த்த அனைவரும் அண்ணாச்சியை ட்ரோல் செய்ய தொடங்கி விட்டார்கள். அவர் ஆடிய நடனம் மற்றும் அவர் நடித்த எமோஷனல் காட்சிகள் அனைத்தையும் இணையத்தில் போட்டு படு மோசமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் ஃபேன் இந்தியா படமாக உருவானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. அதன் பிறகு சிறிது நாட்கள் பிரேக் எடுத்த அண்ணாச்சி மீண்டும் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இதையும் படிங்க : எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

இந்த நிலையில் நேற்று சிறு குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சரவணன் அண்ணாச்சி தனது புது பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய அடுத்த படம் ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறதாம். முன்பு மாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமாக சில திட்டங்களை தீட்ட போகிறாராம்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முழு ஆக்சன் கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் ஷூட் என்ற ஒன்றை வீடியோவாக எடுத்து அதை போட்டு பார்த்த பிறகு அது திருப்தி அடைந்தால் மட்டுமே ஷூட்டிங்கை நடத்துவார்களாம். அந்த டெஸ்ட் ஷூட்டில் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் மீண்டும் எடுத்து பார்த்த பிறகு தான் ஒரிஜினல் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போவதாக சில யுக்திகளோடு களமிறங்க போகிறாராம் அண்ணாச்சி.