Cinema News
யார் வீட்டு காசு? தயாரிப்பாளர் தலையில் துண்ட போட வைத்த சங்கர்! 10 படம் எடுத்துடலாமே?
பிரம்மாண்டத்திற்கு மறு பெயராக இயக்குனர்களில் வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவருடைய படங்களில் பெரும்பாலும் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிக அளவு பட்ஜெட்டே போய்க் கொண்டிருக்கும். இது யாரும் திட்டமிட்டு நடத்துவது இல்லை. கதைக்கு ஏற்ற வகையில் தானாக அமைவதுதான்.
அந்த வகையில் இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் கமலையும் ராம் சரணையும் வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் கமலின் இந்தியன் 2 திரைப்படமும் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் முழுமூச்சாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள்! வாய்க்கொழுப்பால் பல்பு வாங்கிய வடிவேலு
இந்தியன் 2 திரைப்படம் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதோ அதைவிட பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறது கேம் சேஞ்சர் திரைப்படம். அந்தப் படத்தில் ஐந்து பாடல்களை எடுத்து முடித்திருக்கிறாராம் சங்கர். ஐந்து பாடல்களுக்கும் தேவையான தொகையை கேட்டால் திரையுலகமே வாயில் கையை வைத்து ஆச்சரியப்பட்டு நிற்கின்றது.
அந்த ஐந்து பாடல்களுக்கும் ஆன தொகை கிட்டத்தட்ட 91 கோடியாம். கிட்டத்தட்ட நூறு கோடிக்கு பக்கத்தில் வந்து நிற்கிறார் சங்கர். 100 கோடி பட்ஜெட்டில் எத்தனையோ மிகப்பெரிய ஹிட் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அமைந்த பாடல்களுக்கு மட்டுமே இவ்வளவு கோடியில் எடுத்து வைத்திருக்கிறாராம்.
இதையும் படிங்க : விஜய் டிவில எல்லாரும் கார் வாங்கிட்டு இருக்கப்போ!.. பாலா என்ன வாங்கியிருக்கார் பாருங்க!..
இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். இருந்தாலும் படம் ஒரு நல்ல வசூலை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் சங்கர் கேட்கும் தொகையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.