Connect with us
bala

Cinema News

ரஜினி, விஜய் கூட செய்யாத உதவியை செய்த விஜய் டிவி பாலா!. இப்படி ஒரு தங்க மனசா!….

விஜய் டிவி பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து புது புது மாடல் கார்களை வாங்கி சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகழ், குரேஷி, மணிமேகலை, மைனா நந்தினி, சரத், டிஜே பிளாக், பூவையர் என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

மேலும் பல சீரியல் நடிகர் நடிகைகளும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களை வாங்கி வருகின்றனர். ஒரு முறை குக் வித் கோமாளி பாலாவிடம் உங்கள் நண்பர் புகழ் கார் வாங்கிவிட்டார். நீங்கள் எப்போது கார் வாங்க போகிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

இதையும் படிங்க-கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்! அச்சச்சோ இவருக்கு போய் இப்படியா?

அதற்கு அவர், என் மச்சான் புகழ் கார் வாங்குனா, நான் வாங்கியது போல தான். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.

இப்போது மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் அதுவும் அதிலேயே ஐசியு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி ஈரோடு அருகே உள்ள மலை வாழ் மக்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் இதற்காக யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை. என்னுடைய சொந்த பணத்தை போட்டு வாங்கி கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இங்கு 14 கிராமங்களில் 8000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வெகு தூரம் சென்றால் தான் மருத்துவமனையை அடைய முடியும். அதனால் தான் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கு இது சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால் என்னுடைய தகுதிக்கு இது மிகப்பெரிய விஷயம் என்று பாலா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- இனிமேல் குக் வித் கோமாளில தலை வச்சு கூட படுக்க மாட்டேன்!.. ஷிவாங்கியின் முடிவுக்கு காரணம் என்னனு தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top