அந்த நடிகையை இன்ஸ்பிரேஷனா வச்சுதான் போட்டேன்! லேடி கெட்டப் ரகசியத்தை பகிர்ந்த கவின்

Actor Kavin: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று பெரிய திரையில் அதுவும் ரசிகர்கள் அனைவரும் போற்றப்படும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியல் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கிய கவின் தொடர்ந்து சரவணன் மீனாட்சி போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்தார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன்மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதில் லிப்ட் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை லிப்ட் திரைப்படம் பதிவு செய்தது.

இதையும் படிங்க:நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?

லிப்ட் திரைப்படத்திற்கு பிறகு டாடா என்ற ஒரு வெற்றி படத்தில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். தற்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பல சுவாரசிய தகவல்களை கவின் பகிர்ந்து இருக்கிறார்.

அப்போது நிருபர் ஒருவர் இந்த படத்தில் லேடி கெட் அப் போட்டு இருக்கிறீர்கள். அந்த கெட்டப் போட்டதற்கு பின்னாடி யாராவது இன்ஸ்பிரேஷன் இருக்கிறார்களா என கேட்டார். அதற்கு பதில் அளித்த கவின் கண்டிப்பாக ஒரு நடிகை இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை கரீனா சோப்ரா என சந்தானம் போட்ட அந்த லேடி கெட்ட பற்றி கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! ஏன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இதற்கு முன் சிவகார்த்திகேயன் ரெமோ படத்திலும் கமல் அவ்வை சண்முகி படத்திலும் முழுவதுமாக லேடி கெட்டப்புடன் வலம் வருவார்கள். ஆனால் இந்த ஸ்டார் படத்தில் நான் ஒரே ஒரு காட்சியில் மட்டும் காமெடிக்காக அந்த கெட்டப் போட்டு இருக்கிறேன் .அதனால் காமெடியாக இருக்க வேண்டுமே என எண்ணி தான் சந்தானத்தின் அந்த கரீனா சோப்ரா கெட்டப்பை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு இதில் நான் போட்டு நடித்தேன் எனக் கூறினார்.

 

Related Articles

Next Story