விஜய் சேதுபதி அப்பவே மகா புத்திசாலி... சர்டிபிகேட் கொடுத்த பிரபல நடிகர்...

ஆடுகளம் நரேன் விஜய் சேதுபதியுடன் நடித்த திரை உலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

பீட்ஷா படத்துல கிளைமாக்ஸ் என்னன்னு தெரியாது. கார்த்திக் சுப்புராஜ் "நீங்க பண்ணுங்க. இது சஸ்பென்ஸ் படம்"னு சொன்னார். முதல் நாள் சூட்டிங்ல விஜய்சேதுபதி அங்க உட்கார்ந்துருக்காரு. நீங்க ரெண்டு பேரும் பார்க்குறீங்க. "என்ன என்ன ஆச்சு? ஏதாவது சொன்னானா?" இதான் டயலாக். என்ன ஆச்சுன்னே தெரியாது. மேட்டரே தெரியாது. மறுநாள் ஏதாவது முன்னேற்றம் இருக்கான்னு கேட்கணும். "சார் சார் அவ்வளவு எல்லாம் வேணாம் சார் கொஞ்சம் கம்மி பண்ணிடுங்க"ன்னு சொன்னார் டைரக்டர்.

"எனக்கு என்ன மேட்டருன்னே தெரியாது. அவ்வளவு வேணாம்கறே. சரி சரி. உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா படம் ரிலீஸாகி ராங் ரியாக்ஷன்னா உன்னைக் கொன்னுடுவேன்"னு சொன்னேன். "எனக்கு என்னன்னே தெரியாதுல்ல. அப்படியே போகலாம்"னு சொன்னேன். "சார் சார். இப்படி சொல்லும் போது தான் பயமா இருக்கு"ன்னு சொன்னாரு. என்னை விட்டுரு. எனக்குத் தெரியலேலன்னு சொன்னேன். ஆனா படத்துல ஏதோ இருக்குன்னு தெரியுது. விஜய் சேதுபதி சார் எல்லாம் சார் உங்களுக்குத் தெரியாதாமேன்னு கேட்டார். அந்த மொமண்டை நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன்.

VJS2

VJS2

ஒருவேளை இதைத் தெரிஞ்சிட்டு பண்ணிருந்தா கூட இந்த அளவு வந்துருக்காது. கடைசி வரை பார்த்ததும் இந்தப் படத்தைப் போயி மிஸ் பண்ணிருப்பனே நானுன்னு ஆச்சரியப்பட்டேன்.

விஜய் சேதுபதி மிகப்பெரிய புத்திசாலி. சுந்தரபாண்டியன் படத்துல எதுக்கு நீ நடிச்சேன்னு கேட்டேன். ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், பீட்ஷா, தென்மேற்குப் பருவக்காற்றுல நடிச்சிருக்கே. "சார் பர்ஸ்ட் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ரிலீஸ் ஆகப் போகுது. தென்மேற்குப் பருவக்காற்று சீனு ராமசாமியோட படம். இதுல நான் தான் ஹீரோன்னு சொல்லிக்கிடணும். பீட்ஷா ஒரு பீல் குட் படம். சுந்தரபாண்டியன் படத்தோட கதை கன்பார்மா ஹிட்டாகப் போகுதுன்னு தெரியுது.

இதையும் படிங்க... அந்த நடிகையை இன்ஸ்பிரேஷனா வச்சுதான் போட்டேன்! லேடி கெட்டப் ரகசியத்தை பகிர்ந்த கவின்

இதுல நடிச்சா, சுந்தரபாண்டியன்ல வில்லனா நடிச்சவன் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்ல ஹீரோன்னு சொல்வாங்க. எனக்கு இது ஒரு அடையாளம்"னு சொன்னாரு. எவ்வளவு புத்திசாலித்தனம்னு பாருங்க. இதுல என்னாச்சுன்னா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை ரிலீஸ் பண்ண தயங்கினாங்க. அதனால பீட்ஷா முன்னால வந்துடுச்சு. பீட்ஷா பம்பர் ஹிட்டாகும்னு அப்பவே சொன்னாரு. "இது நடக்குதா இல்லையான்னு பாருங்க.. எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் சார்"னு சொன்னார் விஜய் சேதுபதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story