அப்பா வேலைய பாக்க போய் தன் படத்துக்கே ஆப்பு வைத்த ஜெயம் ரவி!. இதெல்லாம் தேவையா செல்லம்!..

Published on: August 17, 2023
jayam ravi
---Advertisement---

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாறியவர் ஜெயம் ரவி. இவரின் அப்பா எடிட்டர் மோகன். பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். ரவியின் அண்ணன் ராஜா இயக்குனர். ஜெயம் ரவியை வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர்.

ஜெயம் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை ரவி உருவாக்கினார். அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஓரளவுக்கு லாபத்தையும் கொடுத்தது. சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான கோமாளி திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

இதையும் படிங்க: தலைவர் 170 படத்தை கிடப்பில் போட்ட லைக்கா!.. ஜெயிலர் பேய் ஹிட் அடிச்சும் வீணாப் போச்சே!..

அதேபோல், அவரின் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம் ஒரு சிறந்த படமாக பார்க்கப்பட்டது. இந்த படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அதற்கு காரணம். அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி அருண்மொழி வேடத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தி இரண்டாம் பாகமும் வெளியானது.

இப்போது இறைவன், ஜெ.ஆர் 30, சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இடையே ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியானதும் தெரியவில்லை. தியேட்டரை விட்டு போனதும் யாருக்கும் தெரியவில்லை.

இதையும் படிங்க: தளபதி 68-ல் தெறிக்கவிடும் விஜய்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!… செம ட்ரீட் இருக்கு..

அந்த அளவுக்கு ஜெயம் ரவிக்கு ஒரு படுதோல்வி படமாக அகிலன் அமைந்தது. இப்படம் தோல்வி அடைந்ததற்கு ஜெயம் ரவியும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, இந்த படம் உருவானபோது ஜெயம் ரவியே அவரே எடிட்டிங் அறையில் அமர்ந்து பல காட்சிகளை மாற்ற சொல்லியிருக்கிறார். ஜெயம் ரவி சொன்ன மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்த அகிலன் படம் படுதோல்வியை சந்தித்தது.

காட்சிகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது இயக்குனருக்கு தெரியும். ஜெயம் ரவியின் அப்பா மோகன் எடிட்டராக இருக்கலாம். ஆனால் ஜெயம் ரவி எடிட்டர் இல்லையே என சொல்லி சிரிக்கிறது திரையுலகம்.

இதையும் படிங்க: யாருமே என்ன நம்பல.. அப்போ ரஜினி ஒன்னு சொன்னார்.. நெகிழ்ந்து போன நெல்சன்….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.