Connect with us
vijay

Cinema News

தளபதி 68-ல் தெறிக்கவிடும் விஜய்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!… செம ட்ரீட் இருக்கு..

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வருபவர் விஜய். ரஜினியோடு போட்டி போடும் அளவுக்கு பெரிய நடிகராக அவர் மாறிவிட்டார். அதனால்தான், அவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என பலரும் பேச துவங்கிவிட்டனர். ஏனெனில், அவரின் படங்கள் வசூலை வாரிக்குவிக்கிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் லோகேஷின் வழக்கமான கேங்ஸ்டர் படம் போலவே உருவாகி வருகிறது. அதோடு, அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், திரிஷா என பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினியை பார்த்து ‘தலைவா’ என்று கத்திய மூன்று வயது சிறுவன்! தனஞ்செயன் பெருமிதம் – சவுக்கடி கொடுத்த ப்ளூசட்டை மாறன்

படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளது. படம் வெளியானால் ரூ.550 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு விஜய் படங்களின் வியாபாரம் அதிகரித்துவிட்டது. அதனால்தான் அவரின் சம்பளமும் ரூ.200 கோடியை தொட்டுவிட்டது.

விஜய் அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் 68வது திரைப்படமாகும். இந்த படத்தில் ஜோதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை வெங்கடபிரபு எழுதி வருகிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதையும் படிங்க: மொத்த பணத்தையும் சுருட்டி போயஸ் கார்டனில் வீடு! தயாரிப்பாளரை இளிச்சவாயாக்கி சுகம் காணும் ஜெயம்ரவி

இந்நிலையில், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. விஜய் ஏற்கனவே, மெர்சல், பிகில், கத்தி ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதேபோல், லியோ படத்திலும் இரண்டு கெட்டப்பில் வருகிறார். இதைத்தொடர்ந்து அவரின் 68வது படத்திலும் இரட்டை வேடத்தில் வருவது அவரின் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top