Cinema News
ரஜினியை மக்கள் திலகம்னு சொன்னா நல்லா இருக்குமா?.. விஜய் ரசிகர்களுக்கு தெளிவா பாடம் புகட்டிய சத்யராஜ்!..
தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் தான். ஆனால், அவரை ஏழிசை மன்னன் என்று தான் அழைக்கிறோம். அதே போல அடுத்த சூப்பர்ஸ்டார் என்றால் எம்ஜிஆர் தான். ஆனால், அவரை மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்று தான் அழைக்கிறோம். ரஜினியை மக்கள் திலகம்னு சொன்னா நல்லாவா இருக்கும் என சத்யராஜ் அங்காரகன் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீண்ட நாட்கள் கழித்து அங்காரகன் படத்தில் வில்லனாக நடித்தது சந்தோஷமாக உள்ளது என அந்த படத்தை பற்றியும் மணிவண்ணன் குறித்தும், பெரியாரிய கருத்துக்களையும் பேசி வந்தார் சத்யராஜ்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த கபாலி!.. ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடி ரஜினி இப்படி பண்ணியிருந்தா? அவ்ளோதான்!..
சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சூப்பர் விளக்கம்:
கடைசியாக ஒரு பத்திரிகையாளர் சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி கேட்க, அந்த கேள்வியை மறுத்து விடுவார் என பார்த்தால், தெளிவாக அதற்கு விளக்கம் கொடுத்து விஜய் ரசிகர்களுக்கு புரிய வைத்து விட்டார் சத்யராஜ் என ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் சார்லி சாப்ளினை சூப்பர்ஸ்டார் என்று சொன்னார்கள், அதன் பின்னர் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவை சூப்பர்ஸ்டார் என்றார்கள், தமிழ்நாட்டில் எம்.கே. தியாகராஜ பாகவதர் தான் முதல் சூப்பர்ஸ்டார். ஆனால், அவரை ஏழிசை மன்னன் என்று தான் அழைத்தனர். இன்றும் அப்படித்தான் கூப்பிடுறோம்.
இதையும் படிங்க: பீஸ்ட் படம் தோல்வியடைய காரணம் இவங்கதானாம்!.. ஒருவழியா வெளியே வந்த உண்மை!..
45 வருஷமா ரஜினிதான் சூப்பர்ஸ்டார்:
எம்ஜிஆரை மக்கள் திலகம் என அழைக்கிறோம். அவரை அடுத்த ஏழிசை மன்னன் என்றால் நல்லாவா இருக்கும். அதே போலத்தான் ரஜினிகாந்தை அடுத்த மக்கள் திலகம் என்றால் நல்லா இருக்குமா? அதே போலத்தான் ரஜினிகாந்த் சாரை 45 வருஷமா சூப்பர்ஸ்டார் என சொல்லி வருகிறோம். என்னை பொறுத்தவரையில் அவர் மட்டும் தான் சூப்பர்ஸ்டார்.
தளபதி என்றால் அது விஜய், தல என்றால் அஜித் சூப்பர்ஸ்டார் என்பது வசூலில் அதிகம் யார் கொடிகட்டிப் பறக்கிறார்களோ அவங்க தான் சூப்பர்ஸ்டார். ஆனால், அவர்களுக்கான பட்டங்கள் மக்கள் திலகம், சூப்பர்ஸ்டார், தளபதி என மாறிக் கொண்டே இருக்கும் என பேசி அனைவரையும் ஹேப்பி ஆக்கி விட்டார் சத்யராஜ்.