கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா?!.. விஜய்க்கு எமனாக வந்த சித் ஸ்ரீராம்.. அட போங்கப்பா!…

Published on: August 21, 2023
leo
---Advertisement---

சமீபகாலமாகவே விஜய் நடிக்கும் புதிய படங்களின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஏனெனில் பொதுவாக அதிகம் பேசாத விஜய் அந்த விழாவில்தான் கொஞ்சம் பேசுகிறார். அதோடு, ரஜினி பாணியில் குட்டி கதையெல்லாம் சொல்கிறார்.

எனவே, விஜய் பட ஆடியோ வெளியீட்டு விழாவை அவரின் ரசிகர்கள் பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். தொடர்ந்து அது பற்றி அப்டேட் வருமா என சமூகவலைத்தளங்களில் தவம் கிடக்கிறார்கள். அதுவும், லியோ பட இசை வெளியீட்டு விழாவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதையும் படிங்க: தளபதி 68ல் நெல்சன் பட நடிகை!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட வெங்கட்பிரபு… ஜோதிகான்னு சொன்னதெல்லாம் சும்மாவா?!.

ஏனெனில், ஒருபக்கம் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து, ஒருபக்கம் ரஜினி சொன்ன பருந்து – காக்கா கதைக்கு எல்லாம் விஜய் லியோ பட விழாவில் பதிலடி கொடுப்பார் என அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விஜய் என்ன பேச திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

ஒருபக்கம், லியோ பட இசை வெளியீட்டு விழாவை எங்கு நடத்துவது என்பதிலேயே இன்னும் குழப்பம் நீடிக்கிறது. முதலில் மதுரையில் நடப்பதாக சொன்னார்கள். அதன்பின் மலேசியா இல்லை துபாய் இதில் ஏதேனும் ஒரு இடத்தில் நடக்கும் என சொன்னார்கள். அதன்பின், மலேசியாவில் நடத்துவது என முடிவெடுத்தனர். செப்டம்பர் மாதம் இறுதியில் இந்நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டனர்.

இதையும் படிங்க: சம்பளம் இது போதும்!. ஆனா அத கொடுத்துடுங்க!. கலாநிதி மாறனிடம் டீல் பேசிய ரஜினி!. தலைவர் செம விவரம்!…

ஆனால், மலேசியாவில் அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஸ்டேடியத்தில் அந்த தேதியில் வேறு ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது தெரிந்ததும், அவர்களிடம் ‘நீங்கள் உங்கள் நிகழ்ச்சியை தள்ளிபோட முடியுமா’ என கேட்டனர். ஆனால், அவர்கள் சாதகமான் பதிலை சொல்லவில்லை.

எனவே, அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டனர். ஆனால், பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருப்பதால் அதிலும் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது அந்த நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடியுமா என லியோ படக்குழு கோரிக்கை வைத்துள்ளனராம். ஒருவேளை அது நடக்கவில்லையெனில் சென்னையில் நடத்திவிடுவோம் எனகிற திட்டமும் இருக்கிறதாம்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: யார் என்ன கொக்கி போட்டாலும், சொல்லிடாதீங்கணே… லோகேஷ் பேச்சை மீறாத லியோ படக்குழு!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.