சமந்தா விவகாரம்!.. விஜய் தேவரகொண்டா மூஞ்சில ஈ ஆடல.. டைரக்ட் அட்டாக் செய்த பயில்வான் ரங்கநாதன்!..

Published on: August 23, 2023
---Advertisement---

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் நோக்கில் தமிழிலும் ப்ரமோஷனை விஜய் தேவரகொண்டா செய்திருந்தார்.

தெலுங்கில் ப்ரமோஷனுக்கு கலந்து கொண்ட நடிகை சமந்தா அப்படியே அமெரிக்காவுக்கு கிளம்பி சென்று விட்டார். அதன் காரணமாக சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் தனியாக வந்து சிக்கிய விஜய் தேவரகொண்டாவை பயில்வான் ரங்கநாதன் டைரக்ட் அட்டாக் செய்ய அரங்கமே அதிர்ச்சியில் ஆடிப் போனது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பாட்டை போட்டு ரஜினியை பங்கம் பண்ணும் ப்ளூ சட்டை மாறன்!.. விடாது நீலம்!..

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் பத்திரிகையாளர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டனர். அதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே தனது ஸ்டைலில் பதில் அளித்து வந்தார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி அவ்ளோ தான் போல!.. தலைவர் 170 பட பூஜைக்கே தேதி குறித்த லைகா.. செம ஸ்பீடில் சூப்பர்ஸ்டார்!..

திருமணம் பற்றிய கேள்விக்கு, கண்டிப்பா உங்களை போல மத்தவங்களை போல நானும் திருமணம் செய்துக் கொள்வேன். ஆனால், இப்போதைக்கு அல்ல, ஒருவேளை நான் திருமணம் செய்துக் கொண்டாலும் உங்களுக்கு சொல்ல மாட்டேன் என்றார்.

கடைசியாக பயில்வான் ரங்கநாதன் விஜய் தேவரகொண்டாவை பார்த்து, சமந்தா நோய்வாய் படுவதற்கு முன்பாக குஷி படம் எடுக்கப்பட்டதா? அதன் பிறகா? என்கிற கேள்வியை முன் வைத்தார். கடந்த ஆண்டு 60 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த ஆண்டு மீதம் இருந்த 40 சதவீத படத்தை எடுத்து முடித்தோம். சமந்தா மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடித்தார் என்றார்.

இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்தே இளச்சி போனோம்!.. பட்டன கழட்டி காட்டி சூடாக்கும் சமந்தா!…

அத்துடன் பயில்வான் ரங்கநாதன் நிற்காமல், சமந்தா நோய்வாய் படுவதற்கு காரணமே நீங்க தான் என குற்றம்சாட்டுகிறேன் என பேசியதும், விஜய் தேவரகொண்டா ஷாக் ஆகி விட்டார். இத்துடன் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறோம் என தொகுப்பாளினி பேசி விஜய் தேவரகொண்டாவை சேவ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.