Connect with us

Cinema News

லியோவுக்கு இப்பவே பல்க் புக்கிங் கேக்கும் விஜய் ஃபேன்ஸ்!.. தியேட்டரில் சரியான சம்பவம் இருக்கு!…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படம் ரிலீஸாக இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இப்பவே அந்த படத்துக்கு பல்க் புக்கிங் கேட்பதாக கங்கா சினிமாஸ் ஓனர் சமீபத்தில் அளித்த பேட்டி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொளத்தூரில் உள்ள கங்கா சினிமாஸ் சமீபத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமந்தா விவகாரம்!.. விஜய் தேவரகொண்டா மூஞ்சில ஈ ஆடல.. டைரக்ட் அட்டாக் செய்த பயில்வான் ரங்கநாதன்!..

பல ஆண்டுகளாக திரைப்படங்களை திரையிட்டு வரும் கங்கா சினிமாஸை புதுப்பித்துள்ள நிலையில், ஜெயிலர் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதாக அந்த படத்தின் ஓனர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்ததாக விஜய்யின் லியோ படத்துக்குத்தான் மிகப்பெரிய ஹைப் இருப்பதாகவும் 3 ஸ்க்ரீன்கள் கொண்ட இந்த திரையரங்கில் மொத்தம் 1700 பேர் ஒரு ஷோ படம் பார்க்கலாம் என்றும் லியோ படம் ரிலீஸ் ஆனால், முதல் நாள் முதல் காட்சியை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை என்றார்.

இதையும் படிங்க: ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சி!. லியோ ஆடியோ லான்ச் இங்கதானாம்!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

இப்பவே விஜய்யின் லியோ படத்துக்கு சில கம்பெனிகள் போன் செய்து ஒட்டுமொத்த ஸ்க்ரீனையே பல்க் புக்கிங் செய்து வருகின்றனர். 700 டிக்கெட்டுகள் எல்லாம் ஒரு கம்பெனி ஆர்டர் போட்டு இருக்கிறது. அந்தளவுக்கு தளபதி விஜய்யின் மாஸ் மற்றும் லியோ படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இந்த முறை தளபதி விஜய் ரசிகர்களை கொண்டாட வைப்பார் என்றே எதிர்பார்க்கிறோம் என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top