Cinema History
3 நாளாகியும் பாட்டு வரல.. திட்டிய தயாரிப்பாளர்!.. கோபத்தில் கண்ணதாசன் சொன்ன வரிகள்!..
நடிகர் திலகம் சிவாஜிக்கு கவிஞர் கண்ணாதாசன் எழுதிய சோகம் மற்றும் தத்துவ பாடல்கள் இப்போதும் அவரின் ரசிகர்கள் சிலாகித்து பேசும் படியே இருக்கிறது. அதனால்தான் கண்ணதாசனின் வரிகள் காலத்தை தாண்டியும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் கூட கிராமங்களில் மரணம் நேர்ந்தால் அவர் எழுதிய ‘சட்டி சுட்டதடா’.. ‘வீடு வரை உறவு’ பாடல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கவிஞர் கண்ணதாசன் எப்படிப்பட சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் வேகமாக பாடல்களை எழுதி கொடுத்துவிடுவார். சில சமயம் பாடல்களை எழுத தாமதமும் செய்வார். சில பாடல்களுக்கு சில நாட்கள் கூட எடுத்துக்கொள்வார். இது தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: கண்ணதாசன் அரை தூக்கத்தில் எழுதிய பாட்டுக்கு தேசிய விருது!.. அட அந்த பாட்டா!..
சில சமயம் அந்த கோபத்தை கண்ணதாசனிடம் காட்டியும் விடுவார்கள். ஆனால், கண்ணதாசன் எழுதி கொடுத்த பாடல் வரிகளை பார்த்ததும், அவரது தமிழில் மயங்கி அமைதியாகிவிடுவார்கள். ஏனெனில், அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை அழகாக எழுதியிருப்பார் கண்ணதாசன்.
பாலச்சந்தர் இயக்கிய ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு கண்ணதாசனை பாடல் எழுத அழைத்திருந்தனர். அந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. ‘வீட்டை விட்டு வெளியே போ’ என சொன்ன தங்கையை அண்ணன் திட்டுகிறான்.. அவனுக்கு கோபமும் வரவேண்டும். அதேநேரம் அதில் தத்துவமும் இருக்க வேண்டும்.. ஒரு சித்தர் பாடல் போல அது இருக்க வேண்டும் என பாலச்சந்தர் சொல்லிவிட்டார்.
எம்.எஸ்.வியும் அதற்கு ஒரு மெட்டை போட்டுவிட்டார். ஆனால், கண்ணதாசனுக்கு பாடல் வரவில்லை. அடுத்தநாள் தயாரிப்பாளரும், எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் அமர்ந்தார்கள். அன்றைக்கும் கவிஞருக்கு பாடல் வரவில்லை. 3வது நாள் அமர்ந்தனர். அன்றும் கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்லவில்லை. உடனே எம்.எஸ்.வி கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..
அப்போது கண்ணதாசன் தயாரிப்பாளரிடம் தனக்கு ‘இதெல்லாம் வேண்டும் வாங்கி வர சொல்லுங்கள்’ என அவருக்கு பிடித்தமானவற்றை கேட்க கோமபடைந்த தயாரிப்பாளர் ‘3 நாளா உமக்கு பாட்டு வரல.. இதுல இதெல்லாம் வேணுமா?.. மழைக்கு ஒதுங்க இந்த இடமாவது உனக்கு இருக்குன்னு நினைச்சுக்கோ’ என சொல்லிவிட்டார்.
கவிஞருக்கு கோபம் வந்துவிட்டது. எனக்கு ஒதுங்க இடமில்லையா?.. தெய்வம் தந்த வீடு எனக்கு வீதியிருக்கு.. என சொன்னாராம். உடனே அவருக்குள் ஏதோ பொறிதட்ட ‘இதுதான் பாடல் வரி’ வீட்டுக்கு போன எம்.எஸ்.விக்கு தகவல்கொடுத்து வர சொன்னார். அப்படி அவர் எழுதிய வரிகள்தான் ‘தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு’ பாடலாக உருவானது.. பாலச்சந்தர் இயக்கியத்தில் அவள் ஒரு தொடர்கதை படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…