லியோ படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவினை நெருங்கி இருக்கும் நிலையில் விஜயின் அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் தளபதி. தொடர்ந்து சமீப நாட்களாக அப்படத்தின் தகவல்களும் வெளியாகி வருகிறது.
இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு கொடுக்கும் போதே விஜயிற்கு கதையில் அதீத நம்பிக்கை இருந்தது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அப்படி ஒரு கதையை தான் வெங்கட் கூறியதாகவும் அதனால் தான் விஜய் இதற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சும்மா இருக்காம சூடு வச்சிக்கிட்ட ரஜினி… ஆப்பு செம பெரிசா இருக்கும் போலயே!
இதைதொடர்ந்து இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மற்ற நாயகிகள் போல் இல்லாமல் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதால் கண்டிப்பாக கதையின் மீது வெயிட் ஏறியது.
இதுமட்டுமல்லாமல் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவுடன் தமனும் இசையமைக்க இருப்பதும் தளபதி 68 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் ஒரு முக்கிய தகவல்கள் இரண்டு நாட்களாக வலம் வருகிறது. ஆனால் இந்த கதை வெங்கட் பிரபு எடுத்தால் கண்டிப்பாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
அதாவது, அரசியல்வாதியான அப்பா விஜயை கொன்று அவரின் இடத்தினை பிடிக்கிறார் ஜோதிகா. இன்னொரு விஜய் மியூசிக் டீச்சராக இருக்கிறார். பிரியங்கா மோகன் ஜோதிகாவின் தங்கையாகவும், டீச்சரின் உதவியாளராக நடிக்க இருக்கிறாராம்.
இதையும் படிங்க: மறுபடியும் அதே கேரக்டர் தானா?.. ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..
ஜெய் இப்படத்தில் நடிகராகவும், சிம்பு இப்படத்தில் பத்திரிக்கையாளராகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. இந்த கதையை கேட்கும் போது கிட்டதட்ட சர்கார் மற்றும் கொடியை சேர்த்த கலவை போன்று இருப்பதாக பலர் விமர்சித்தும் வருகின்றனர். வெங்கட் பிரபு பெரும்பாலும் காப்பி அடிக்காமல் தன்னுடைய கற்பனையில் தான் எடுப்பவர் என்பதால் தளபதி 68 படத்திற்கு இப்போதே பலதரப்பிலும் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
