Cinema History
இவருக்காக தன் கொள்கையே மாற்றிய ரஜினிகாந்த்! பாலசந்தரை விட இவர் ஒசத்தியா?
ரஜினிகாந்த் எப்போதும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் ஒரு கொள்கையை பின்பற்றுவார். அது எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட கண்டிப்பாக வருவேன் எனக் கூறிவிடமாட்டார். பத்திரிக்கையில் எல்லாம் பெயர் போடாதீர்கள். வரேன் என சொல்லும் நிகழ்ச்சிகளும் உண்டு.
இது தன்னுடைய பெயரை பார்த்து கூட்டம் கூடி கடைசியில் அவரால் வர முடியாமல் போனால் அது மற்றவர்களுக்கு ஏமாற்றமாகி விடக்கூடாது என்பதற்காக தான். இந்த கொள்கையை தான் தொடர்ச்சியாக பாலோ செய்து வருகிறார்.
இதையும் படிங்க : எனக்கே ஸ்கெட்சா? பிச்சு பிச்சு! கலைஞரே கலாய்த்த இசையமைப்பாளர்!
தன்னை சினிமாவில் பெரிய இடத்துக்கு கொண்டு வந்த இயக்குனர் பாலசந்தரின் கொண்டாட்ட நிகழ்வுக்கு கூட அவர் பெயர் பத்திரிக்கையில் இல்லை. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருவருக்கும் பல வருடமாக நட்புறவு இருந்தும் கூட வாக்கு கொடுக்கவில்லை ரஜினிகாந்த்.
ஆனால் இதற்கு நேரெதிராகவே இசையமைப்பாளர் தேவாவின் கொண்டாட்ட நிகழ்வுக்கு ரஜினியை அழைக்க போனபோதே கண்டிப்பாக நான் வருகிறேன் என உறுதி கொடுத்தாராம். அந்த நம்பிக்கையில் பத்திரிக்கையில் பெயர் போட்டார்களாம். அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
இதையும் படிங்க : சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..
இதுகுறித்து தேவா ஒரு பேட்டியில் தெரிவித்ததாவது, பட சமயத்தில் தான் அவருடன் நான் நேரம் செலவழித்தேன். என்னுடைய பிள்ளைகள் திருமணத்தில் கலந்து கொண்டார். இதைபோன்ற முக்கிய நிகழ்வில் மட்டுமே அவரினை சந்திப்பேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரை கூப்பிட சொல்லி ஏற்பாட்டாளர்கள் தான் கேட்டுக்கொண்டனர்.
அதனால் அவரை போய் பார்த்து பத்திரிக்கை கொடுத்தேன். மன நிறைவாக பேசினார். டிக்கெட் விற்பனை குறித்து கேட்டார். எப்படியோ போவதாக சொன்னேன். அதனால் நான் 200 சதவீதம் இந்த விழாவுக்கு வருகிறேன் என அவரின் மேனேஜரை வைத்து கூறினார். அதுமட்டுமல்லாமல் அவரால் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என்பதற்காக எந்தெந்த இடங்களில் எல்லாம் விளம்பரப்படுத்த வேண்டுமோ. அதை செய்து விடுங்கள் என்றும் தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நெருக்கமாக 2 மணி நேரம் அமர்ந்து இருந்தார். அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நிறைய நேரம் பேசினார் எனக் குறிப்பிட்டார்.