Cinema History
ரஜினி வேண்டாம்னு சொல்லி சூப்பர் ஹிட் அடித்த ரெண்டு பாட்டு!.. பாட்ஷா பட சீக்ரெட்டை பகிர்ந்த சுரேஷ் கிருஷ்ணா…
ரஜினி மாஸ் ஹீரோவாக, டானாக நடித்து 1995ம் வருடம் வெளியான திரைப்படம் பாட்ஷா. ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மகுடமாக இருப்பது இந்த படம்தான். அவ்வளவு கூஸ்பம்ஸ் காட்சிகள் இந்த படத்தில் இருந்தது. ரஜினியை பிடிக்காதவர்களுக்கு கூட இப்படம் பிடித்திருந்ததே இப்படத்தின் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் சுரேஷ் கிருஷ்ணா இந்த படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்ட போது ‘இப்படத்தின் வெற்றிக்கு தேவாவின் இசை முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: கேப்டனை தவிர யாராலும் பண்ண முடியாது! விஜயகாந்துக்காக ரஜினி விட்டுக்கொடுத்த படம்
அதேநேரம், இந்த படத்தின் 2 பாடல்களை ரஜினி வேண்டாம் என சொன்னார். முதலில் அவர் சொன்னது ‘நீ நடந்தால் நடை அழகு பாடல்’. ஏனெனில் ஏற்கனவே ‘ஸ்டைலு ஸ்டைலுதான் மற்றும் தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு’ என 2 டூயட் பாடல்கள் இருக்கிறது. இது தேவையில்லை. பாடல் நன்றாக இருக்கிறது. எனவே, கேசட்டில் மட்டும் இருக்கட்டும்’ என சொன்னார். இதைக்கேட்டு தேவாவும் முகம் வாடிப்போனார்.
ஆனால், அந்த பாடல் என் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு ஐடியா வந்தது. மாணிக்கம் ஜிம்முக்கு போறான். அதுவும் நீங்கதான். அங்கு இருக்க எல்லாரும் மாணிக்கம்தான்.. வெளியே வந்த செக்யூரிட்டியும் மாணிக்கம்தான்.. என நான் சொல்லி முடிக்க ஆர்வமான ரஜினி அப்படியே வெளியே வந்தா செக்யூரிட்டியும் நான்தான்..
அங்க கார் வருது. அதுல டிரைவரும் நான்தான். ஒரு சாமி ஊர்வலம் வருது.. அதுல நாதஸ்வரம் வாசிக்கிறதும் நான்தான்.. நான் கண்டக்டர் வேஷம் போட்டதே இல்லை.. ஒரு பஸ் வருது அதுல கண்டக்டர் நான்தான்’ என 10 நிமிடத்தில் அந்த பாடலை எப்படி எடுப்பது என அவரே சொல்லிவிட்டார். அடுத்து 2 நாளில் அப்பாடலை எடுத்துவிட்டோம்.
இதையும் படிங்க: ரஜினி, கமலை இந்நேரம் பந்தாடியிருப்பாரு! குடியையும் தாண்டி கேப்டன் வாழ்க்கையை சீரழித்த அந்த விஷயம்
அதேபோல், பாட்ஷா கெட்டப்பில் இருக்கும் ரஜினிக்கு ஒரு பாடல் வைக்கலாம் என நினைத்தேன். ஆனால், ரஜினிக்கு அதில் விருப்பமில்லை. பாட்ஷா பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறான்.. அவர் ஒரு டான்.. அவன் எப்படி ஆடி பாடுவான். வேண்டாம் என்றார். ஆனால், நான் உறுதியாக இருந்தேன்.
கன்னடத்தில் ஒரு கவிதை இருக்கிறது. வாழ்க்கையை எட்டு எட்டாக பிரிந்து வாழ வேண்டும் என்பது போல அது வரும். தேவாவிடம் சொல்ல அவர் சிறப்பாக ட்யூன் போட்டார். வைரமுத்துவும் அதற்கு அழகாக பாடல் வரிகளை எழுதி கொடுத்துவிட்டார். அதன்பின் ரஜினி அதில் நடித்தார்’ என சுரேஷ் கிருஷ்ணா அதில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினியை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க! அவர் வாய்முகூர்த்தம் – இப்ப வரைக்கும் நடக்குது – நெகிழ்ச்சியில் தேவா