Cinema History
பாட்ஷா படத்தின் அந்த முக்கிய சீனை தூக்க சொன்ன தயாரிப்பாளர்!.. ரஜினி கொடுத்த வாக்குறுதி!..
80களில் இருந்து தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க துவங்கிய காலத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தார். அப்படித்தான் எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை,ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில படங்கள் வெளிவந்தது.
ஒருகட்டத்தில் அதிலிருந்து விலகி கமர்ஷியல் படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். சின்ன குழந்தைகளுக்கும் பிடித்த ஹீரோவாக ரஜினி மாறினார். ரஜினி தனது திரை வாழ்வில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை சூப்பர் மாஸ் ஹீரோவாக காட்டிய திரைப்படம் பாட்ஷா. ரஜினியையும், அவரின் படங்களையும் பிடிக்காதவர்களுக்கு இப்படம் பிடிக்கும். 1995ல் வெளிவந்த இந்த திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. டான் ஒருவன் தன்னை வெளிகாட்டி கொள்ளாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறான் என்பதுதான் இப்படத்தின் கதை.
இதையும் படிங்க: ரஜினி வேண்டாம்னு சொல்லி சூப்பர் ஹிட் அடித்த ரெண்டு பாட்டு!.. பாட்ஷா பட சீக்ரெட்டை பகிர்ந்த சுரேஷ் கிருஷ்ணா…
இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தை ஆர்.எம். வீரப்பன் தயாரித்திருந்தார். இவர் சினிமாவில் நல்ல அனுபவம் உள்ளவர். கதாசிரியரும் கூட. எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர். எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோது அவரின் வலது கையாக உடனிருந்தவர். அதனால்தான் ரஜினி அவருக்கு கால்ஷீட் கொடுத்தார்.
பாட்ஷா படத்தில் ரஜினியை ஆனந்தராஜ் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போல் ஒரு காட்சி வரும். இந்த காட்சியை சுரேஷ் இயக்குனர் எடுப்பது தெரிந்ததும் நேரில் அவரை வரவழைத்த ஆர்.எம்.வீரப்பன் ‘இப்படி காட்சி எடுக்கக் கூடாது. ரஜினியை ஒருவர் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சியை அவரின் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஸ்கீரினை கிழித்துவிடுவார்கள்’ என சொல்லிவிட்டார். இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா ரஜினியிடம் தொலைப்பேசியில் சொல்ல, ரஜினி உடனே அந்த இடத்திற்கு வந்தாராம்.
இதையும் படிங்க: ரஜினிக்கு திருப்தியே இல்லை.. மாஸ் ஹிட்டாக மாற்றிய தேவா!. அட அந்த படத்தையா சொன்னாரு!..
ஆர்.எம்.வீரப்பனிடம் ரஜினி ‘கதை ஒரு டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த காட்சி படத்திற்கு மிகவும் முக்கியம். நாங்கள் முழு படத்தையும் முடித்து உங்களுக்கு போட்டு காட்டுகிறோம். அப்போதும் நீங்கள் வேண்டாம் என சொன்னால் அந்த காட்சியை நீக்கிவிடலாம். தேவைப்பட்டால் மீண்டும் சில காட்சிகளை எடுத்து கொள்ளலாம்’ என சொன்னதும் ஆர்.எம்.வீரப்பன் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
அதன்பின் முழுப்படத்தையும் பார்த்த வீரப்பன் ‘இந்த காட்சிதான் படத்தின் ஹைலைட்.. ரஜினி திருப்பி ஆனந்தராஜை அடிக்கும்போது தியேட்டரில் விசில் பறக்கும்’ என சொன்னாராம். அவர் சொன்னதுபோலவே அந்த காட்சி ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் காட்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இத்தன வருஷம் தாண்டியும் பேசுவாங்கன்னு அப்ப தெரியல!.. பாட்ஷா அனுபவம் பகிரும் கிட்டி…