Connect with us

Cinema News

என் ஃபர்ஸ்ட் லவ்வுக்கு வில்லனே இவர்தான்!.. ஷாருக்கான் முன்னாடியே 96 பட கதையை ஓட்டிய விஜய்சேதுபதி!..

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் புரமோட் செய்யும் விதமாக சென்னையில் இன்று பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, யோகி பாபு, அனிருத், அட்லீ, பிரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசும் போது தன்னுடைய முதல் காதலுக்கு வில்லனே ஷாருக்கான் தான் என ஒரு 96 பட ரேஞ்சுக்கு ஒரு காதல் கதையை சொல்லி அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார்.

இதையும் படிங்க: ஹார்ட்டு வீக்கு!.. இவ்ளோ அழக தாங்காது செல்லம்!.. கேப்ரியல்லாவின் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்…

நான் சின்ன வயசுல படிச்சிட்டு இருந்தப்போ ஒரு பொண்ணை ரொம்பவே பிடிக்கும். அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனால், அந்த பொண்ணுக்கு என்னை விட ஷாருக்கானைத்தான் புடிக்கும்னு சொல்லிட்டு போயிட்டாங்க, அப்பவே என் ஃபர்ஸ்ட் லவ்வுக்கு இந்த ஆளு வில்லனா மாறிட்டாரு.. அதுக்கு ரிவெஞ்ச் எடுக்கத்தான் ஜவானில் இவருக்கு வில்லனா நடிச்சி பழிவாங்கிட்டேன் என பேசி ரசிகர்களை கலகலப்பாக்கினார்.

இதை கேட்டுவிட்டு ஷாருக்கான் சும்மா இருப்பாரா என்ன, அவர் மேடை ஏறி பேசும் போது விஜய்சேதுபதியின் லவ் ஸ்டோரிக்கு ஆப்படிக்கும் விதமாக நீ வேணா வில்லனா மாறி என்னை ரிவெஞ்ச் எடுக்கலாம். ஆனால், எப்போதுமே என்னோட கேர்ள்ஸை உன்னால பறிக்கவே முடியாது என பேசி மாஸ் பண்ணிவிட்டார்.

இதையும் படிங்க: மகனுக்காக இத கூட பண்ணல! தனித்தே விடப்பட்ட ஜேசன் விஜய் – அடுக்கடுக்கான உண்மைகளை கூறிய பிரபலம்

ஆரம்பத்தில் விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்து, அனிருத்துக்கு முத்தம் கொடுத்த ஷாருக்கான் கடைசி வரை அவர்களுடன் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டே இருந்தார். ஸ்டேஜில் அனிருத்துடன் ஷாருக்கான் ஏறி ஆட்டம் போட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஷாருக்கானின் எனர்ஜியை பார்த்து விட்டு கோலிவுட் ரசிகர்கள் இப்படியொரு ஆள் நம்மகிட்ட இல்லையேப்பா மனுஷன் என்னம்மா ஸ்பீடா இருக்காருன்னு கூஸ்பம்ஸ் அடைந்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top