ரசிகர்களின் கவலையை பூர்த்தி செய்த அஜித்! விடாமுயற்சி இல்லனா என்ன? இது போதும் தல

Published on: August 31, 2023
ajith
---Advertisement---

அஜித் நடிப்பிக் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50வது படமாகவும் மங்காத்தா திரைப்படம் அமைந்தது. அஜித்திற்கு 50 வது படம் என்பது ரசிகர்களுக்கு ஒரு  பெரிய விருந்தே வைக்க வேண்டும் என விரும்பிய வெங்கட் பிரபு அஜித்தை இதுவரை காட்டாத கதாபாத்திரத்தி நடிக்க வைத்தார்.

நடிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் அதில் வெற்றியும் கண்டார். ஒரு பக்கா வில்லனாக மங்காத்தா படத்தில் நடித்து அஜித் மேலும் ரசிகர்களின் அன்பை பெற்றார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இவர்களுடன் அஞ்சலி, அர்ஜூன், ஆண்ட்ரியா, லஷ்மி ராய், பிரேம்ஜி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க : ஜெய்லர் கொடுத்த வாழ்க்கை… சிவராஜ்குமாரின் புதிய அவதாரம்… கல்லா கட்ட ரெடி!

ஒரு திகில் படமாக இந்த திரைப்படம் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே செம ஹிட். படம் ரிலீஸாகி  கலெக்‌ஷனை அள்ளியது. 2007 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் பில்லா திரைப்பட வசூலை இந்தப் படம் முறியடித்தது.

இந்த நிலையில் மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதை ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு சில தியேட்டர்களில் மறு ஒளிபரப்பு செய்து ரசிகர்களின் கவலையை பூர்த்தி செயது.

ஒரு பக்கம் ஜெய்லர், லியோ என ஹைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அஜித்தின் விடாமுயற்சிக்கு விடையே தெரியாமல் இருந்தது. அதை எல்லாம் மறக்கும் விதமாக இன்று இந்தப் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் பல பிரபலங்களின் வீடியோ வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : சூர்யாவுக்கு பிடிக்காத விஷயம்! துணிந்து இறங்கிய அஜித் – சுதா கொங்கராவை ஆச்சரியப்படுத்திய ஏகே

மேலும் இந்தப் படத்தில் துணிந்து நடித்த அஜித்தின் தைரியத்தை பற்றியும் சிலாகித்து வருகிறார்கள். இதை அஜித் ரசிகர்களும் ஆர்வமாக ரசித்து வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.