ரஜினி கமல் ஜெயிக்கிறதுக்கு இதுதான் காரணம்!. நான்தான் கோட்டை விட்டேன்!. காலம்போன காலத்தில் புலம்பும் சத்தியராஜ்!…

Published on: September 2, 2023
sathya
---Advertisement---

80களில் தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்தவர்கள் இன்று 2கே கிட்ஸ் வரையிலும் அனைவரது நெஞ்சத்திலும் இடம் பிடித்து ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். 60 வயதை தாண்டியும் இன்றும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகர்களாகவே இருவரும் இருந்து வருகிறார்கள்.

கமலுக்கு விக்ரம், ரஜினிக்கு ஜெய்லர் என யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்து ஓல்டு இஸ் கோல்டு என நிரூபித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறை நடிகர்கள் என சொல்லப்படும் யாராலும் இவர்களின் ரெக்கார்டை பிரேக் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க : குஷி விமர்சனம்: புருஷன் பொண்டாட்டியா விஜய்யும் சமந்தாவும் பர்ஃபெக்ட்டா இருக்காங்களே!..

ஒரு பக்கம் அஜித் விஜய் என மாபெரும் நட்சத்திரங்கள் மல்லுக்கு நிற்கின்றனர். ஒரு பக்கம் பேன் இந்தியா படங்கள் என வரிசையாக போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் இவர்களின் சாம்ராஜ்யத்தை யாராலும் தகர்க்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினி கமலை பற்றிய ஒரு ரகசியத்தை சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது  ‘ரஜினி-கமல், விஜயகாந்த்-சத்யராஜ், பிரபு-கார்த்திக் என்று வரிசையாக ஒரு காலகட்டம் இருந்தது. விஜயகாந்த் அரசியல் காரணமாக  சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

அதிலிருந்தே என்னுடைய இடத்தை நான் தவறவிட்டேன். ஆனால் ரஜினியும் கமலும் அப்படியே தக்கவைத்துக் கொண்டனர். அதாவது சினிமாவில்  மெனக்கிடல் என ஒன்று இருக்கிறது. நேர்மையாக உழைப்பது என ஒன்று இருக்கிறது.

இதையும் படிங்க : மிஷ்கினை டீலில் விட்ட விஜய் சேதுபதி! இனிமே நடிப்பு மட்டும்தானா?!.. கட்டிப்பிடி பாசமெல்லாம் சும்மாவா?..

என்னுடைய மெத்தனம்தான் இந்த இடத்தை விட்டதற்கு காரணம். ஆனால் ரஜினியிடமும் கமலிடமும் அந்த மெனக்கிடல் அதிகமாகவே இருந்தது. இன்னும் இருக்கின்றது. அதனால்தான் அவர்கள் இன்னும் அப்படியே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.