அடடே விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னாடியே ஃபைட் சீன் அப்டேட் வந்துடுச்சே!.. தல தாங்குவாரா?..

Published on: September 6, 2023
---Advertisement---

லைக்கா தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடா முயற்சி படத்தின் பிரம்மாண்டமான ஸ்டண்ட் காட்சி குறித்த அப்டேட் ஒன்று சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியாத நிலையில் பணத்திற்கான வேலைகளை நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் ரகசியமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்‌ஷ்மி!..

நடிகர் அஜித் துபாயில் உள்ள தனது வீட்டில் இருந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் பார்த்து வருவதாக கூறுகின்றனர். துபாய் பாலைவனத்தில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றை இயக்குனர் மகிழ்திருமேனி பிளான் செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

வலிமை படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் வாட்டர் போட் காட்சிகள் கிளைமாக்ஸில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தன. அதை விட செம த்ரில்லிங்காக அதிக வெப்பமான துபாய் பாலைவனத்தில் நடிகர் அஜித் பயங்கர ரிஸ்க் எடுத்து கார் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ரஜினி இமேஜை காலி பண்ண போகும் லால் சலாம்!.. மகளுக்காக மாட்டிக்கொண்டு முழிக்கும் தலைவர்!..

வலிமை படத்தில் உலகத்தரத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அந்தரத்தில் சும்மா பறந்து பறந்து நடைபெற்ற நிலையில், இந்த முறை பாலை வனத்தில் பிரம்மாண்ட ஜீப் கார்களை பறக்கவிட்டு ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஸ்டைலில் ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்படுகிறதா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எல்லாம் ஓகே இதெல்லாம் நடப்பதற்கு முன்னாடி படப்பிடிப்பை விடாமுயற்சி படக்குழு எப்போ ஆரம்பிக்கப் போகிறது என்பது தான் ரசிகர்களின் முதல் கேள்வியாக எழுந்துள்ளது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.