அம்மா அப்பா சண்டையைப் பார்த்து கிணற்றில் குதித்த மகள் – காப்பாற்ற போன அண்ணனும் பலி !

Published On: December 23, 2019
---Advertisement---

b09f6cae37cafaafbf9a1e76dbf447b7

கோவையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த தாய் தந்தையைப் பார்த்த மகள் கிணற்றில் குதிக்க, அவரைக் காப்பாற்ற சென்ற அண்ணனும் இறந்துள்ளனர்.

கோவை மதுக்கரை பகுதியில் வசித்துவருபவர்கள் முத்துசுவாமி மற்றும் வேலுமணி தம்பதிகள். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும் அருண்குமார் என்ற மகனும் உள்ளனர். பெற்றொர் இருவரும் எப்போதும் சண்டைப் போட்டுக்கொண்டே இருந்ததைப் பார்த்து சித்ரா மனவேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையில்,நேற்று இரவு வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களை சித்ரா சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தாததால் மனமுடைந்த சித்ரா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவரது சகோதரர் அருண் அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment