விஜய் படத்தில் இருந்தே ஆட்டைய போட்ட வெங்கட்பிரபு? காப்பி அடிக்கிறது ஓகே… அதுக்குனு ப்ளாப் படத்தையா?

Published on: September 9, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படங்களுக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் லியோ படத்தினை எதிர்த்து தளபதி68 படத்துக்கு நிறைய அப்டேட்கள் தொடர்ச்சியாக ரிலீஸாகி கொண்டே இருக்கிறது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஜயிற்கு ஜோடியா பிரியங்கா மோகன் புக்காகி இருக்கிறார். மற்றொரு நடிகைக்கு சிம்ரன், ஜோதிகா என பட்டியில் நீண்டுக்கொண்டே இருக்கிறது. இதில் கடைசியாக சினேகா டிக் அடிக்கப்படலாம் என படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகிறது.

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து தமனும் இசையமைக்க இருக்கிறார். கல்பாத்தி அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இப்படம் டைம் ட்ராவல் படமாக உருவாக இருக்கிறது. இதற்காக சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிக்கான சில டெஸ்ட்கள் நடைபெற்றது.

மேலும், விஜயின் தளபதி68 அரசியல் படமாகவோ இல்லை ராவில் வேலை செய்யும் அதிகாரி குறித்த கதை என பல யூகங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படம் வசீகரா படத்தினை போல அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..

விஜய், சினேகா இணைந்து நடித்த அப்படத்தில் காமெடியான ரோலில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட சீரியஸ் காட்சிகளே இல்லாத முழு நீள கமர்சியல் படமாக அமைந்திருக்கும். ஆனாலும் இந்த படம் பெரிய அளவில் வசூலை படைக்கவில்லை. கிட்டத்தட்ட ப்ளாப் படமாகவே அமைந்து இருந்தது. 

காமெடியான ரோலில் கலகலப்பான விஜயை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என பலரும் கிசுகிசுகின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. அந்த நேரத்தில் விஜய் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.