
Cinema News
விஜயகாந்துக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த கமெடி நடிகர் அவர்தான்!.. ஆச்சர்ய தகவல்!..
Published on
By
மதுரையில் விஜயராஜாக இருந்த விஜயகாந்த் ஒருநாள் நடிகர் ரஜினியுடன் சில மணி நேரம் செலவழிக்க நேர்ந்தது. அப்போது. ‘நீங்கள் கூட நடிக்கலாமே’ என ரஜினி சொல்ல அப்படித்தான் அவருக்கு நடிக்கும் ஆசை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்பா உருவாக்கிய ரைஸ் மில்லை நடத்தி வந்த விஜயகாந்த் அதைவிட்டு விட்டு நாமும் நடிகராக மாறனும் என ஆசைப்பட்டு சென்னை வந்தார்.
விஜயராஜை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். சென்னை வந்து அறையெடுத்து தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடினார். சினிமா அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. பல சினிமா கம்பெனிகளிலும் ஏறி இறங்கினார்.
இதையும் படிங்க: ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்த விஜயகாந்த்! கேப்டனுக்கு பின்னாடி இப்படி ஒரு வெறியனா?
விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சினிமா நிறுவனங்களில் கொடுத்து வாய்ப்பு கேட்டார். ‘இந்த மூஞ்சிக்கு நடிக்கனும்னு ஆசையா?’ என பலரும் கிண்டல் செய்தனர். பல அவமானங்களை சந்தித்தார். ஒருவழியாக ‘தூரத்து இடி முழுக்கம்’ எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் அவருக்கு ஒய்வே இல்லை. பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரஜினியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர் ஒருகட்டத்தில் அவருக்கே போட்டியாகவும் மாறினார்.
இதையும் படிங்க: சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..
விஜயகாந்த் சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட போது அவருக்கு உதவியர் நடிகர் குள்ளமணி என்பது பலருக்கும் தெரியாது. அதாவது, விஜயகாந்த் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது குள்ளமணி பிஸியான நடிகராக பல படங்களிலும் நடித்து கொண்டிருந்தார்.
விஜயகாந்துக்கு உதவ நினைத்த அவர் விஜயகாந்தின் போட்டோக்களை தன் நடிக்கும் பட நிறுவனங்களில் காட்டி ‘இவர் எனக்கு தெரிந்தவர். பெயர் விஜயராஜ்.. எந்த வேடம் என்றாலும் நடிப்பார். வில்லன் வேடத்தில் கூட நடிப்பார்.. வாய்ப்பு கொடுங்கள்’ என விஜயகாந்துக்காக வாய்ப்பு கேட்டார்.
பின்னாளில் விஜயகாந்த் ஹீரோ ஆனபின் அவரின் பல படங்களிலும் குள்ளமணிக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்து வாழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....