Cinema History
ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…
எம்.ஜி.ஆரின் பல படங்களில் வில்லனாக நடித்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர்தான் நடிகர் நம்பியார். தொடர்ந்து வில்லனாக நடித்தாலும் நம்பியாருடனும் மிகவும் நட்பாக பழகியவர்தான் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளங்களில் இருவரும் அன்புடன் பழகி கொள்வார்கள். நம்பியாரிடம் மனம் திறந்து பேசும் நல்ல நண்பராகவே எம்.ஜி.ஆர் இரு்ந்தார்.
நம்பியாரும் எம்.ஜி.ஆரை போலவே நாடகங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து முன்னேறியவர்தான். அது என்னவோ துவக்கம் முதலே அவருக்கு நெகட்டிவான வேடங்களே கிடைத்தது. அவரும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தி வந்தார்.
இதையும் படிங்க: கண்ணதாசனுக்காக இசையமைப்பாளரை மாற்றிய எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா!…
ஒருமுறை ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் வெளியான சில நாட்கள் கழித்து நம்பியார் காரில் வந்து கொண்டிருந்தபோது சிலர் அவரின் காரை மறித்துள்ளனர். ‘என்ன விஷயம்.. யார் நீங்க?’ என நம்பியார் கேட்க ‘ நீ எப்படியா எங்க தலைவர அடிக்கலாம்?’ என கோபமாக கேட்க நம்பியாரோ ‘யாரு உங்கள் தலைவர்?.. நான் எப்ப அடிச்சேன்?’ என கேட்க, ‘வாத்தியாரா அடிச்சியே’ என சொல்ல எம்.ஜி.ஆரைத்தான் சொல்கிறார்கள் என அவருக்கு புரிந்துவிட்டது.
‘எனக்கு காசு கொடுத்தாங்க அடிச்சேன். அவர் என்னை அடிச்சத நீ பாக்கலயா?’ என கேட்க ‘ஓ காசு கொடுத்தா எங்க வாத்தியார அடிப்பியா?’ என மேலும் பொங்க, ‘சரிப்பா!.. இனிமேல் அடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்தவர்தான் நம்பியார். இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
எங்க வீட்டு பிள்ளை படம் சூப்பர் ஹிட் அடித்து வெள்ளிவிழா கொண்டாடியது. எனவே, இதற்காக விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர், அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அப்படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேச துவங்கிய போது அவர் பேசுவது மக்களுக்கு தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக அவர் முன்பு இரண்டு மைக்குகள் வைக்கப்பட்டது. இதைப்பார்த்த நம்பியார் ‘நாங்களெல்லாம் பேசும் போது ஒரு மைக். எம்.ஜி.ஆர் பேசும்போது மட்டும் இரண்டு மைக்கா?.. அக்கிரமம்’ என நகைச்சுவையாக சொன்னார். இதைக்கேட்டு அங்கிருந்த கூட்டமே சிரித்தது. எம்.ஜி.ஆர் சாதாரணமானவரா!. பேச துவங்கியவர் ‘இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு இரண்டு மைக்’ என சொல்ல கைதட்டல் விண்ணை பிளந்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?