1950,60களில் திரையுலகில் ஒரு பழக்கம் இருந்தது. சிவாஜியை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து படம் எடுப்பார்கள். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு என சில இயக்குனர்கள் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமே படம் எடுப்பார்கள். இப்படி நடக்க தயாரிப்பு நிறுவனங்களும் காரணமாக இருந்தது.
வாகிணி ஸ்டுடியோ தேவர் பிலிம்ஸ், மாடர்ன் பிக்சர்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், ஏவிஎம் என அப்போது திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்களுக்கென தனி இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்கள் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே படம் இயக்குவார்கள். ஆனால், தோல்வி மற்றும் நஷ்டம் காரணமாக அதில் சில இயக்குனர்கள் மற்ற நடிகர்களை வைத்து எடுத்த கதையும் உண்டு.
இதையும் படிங்க: தோல்விகளை சந்தித்த சிவாஜியை தூக்கிவிட்ட ஹிந்தி ரீமேக் படம்!… எந்த படம்னு தெரியுமா?…
சிவாஜியை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. இவரை சிவாஜி பட இயக்குனர் என்றே அழைப்பார்கள். சிவாஜியை வைத்து ஏபி நாகராஜன் இயக்கிய படம் நவராத்திரி. அதேபோல், பந்துலு இயக்கிய திரைப்படம் முரடன் முத்து. இரண்டு படமும் ஒரே நேரத்தில் உருவானது.
அப்போது சிவாஜி 99 படங்களில் நடித்து முடித்திருந்தார். எனவே, முரடன் முத்துவை 100வது படமாக சிவாஜி அறிவிப்பார் என பந்துலு நினைத்தார். ஆனால், சிவாஜியோ நவராத்திரி படத்தை அறிவித்தார். இதனால், பந்துலுவுக்கு கோபம் வந்தது. அதோடு, சிவாஜியை வைத்து அவர் தயாரித்து இயக்கிய சில படங்கள் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் கடனிலும் சிக்கினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…
எனவே, எம்.ஜி.ஆரிடம் சென்று தனக்கு ஒரு படம் நடித்து கொடுக்கும்படி கேட்டார். அவருக்கு உதவ நினைத்த எம்.ஜி.ஆர் ‘ஒரு நல்ல கதையோடு வாருங்கள்’ என சொல்ல பந்துலு உருவாக்கிய கதைதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படத்தை பந்துலு தயாரித்து இயக்கினார். இந்த படம் உருவான போது எம்.ஜி.ஆருக்கு இருந்த அரசியல் எதிர்ப்பால் படப்பிடிப்பை நடந்த முடியாமல் பந்துலு சிரமப்பட்டார். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
தயாரிப்பாளரின் நிலையை அறிந்த எம்.ஜி.ஆர் தனது தலைமையிடம் பேசி படப்பிடிப்புக்கு இடையூறு வராமல் பார்த்துக்கொண்டு அப்படத்தில் நடித்து கொடுத்தார். அப்படி உருவான ஆயிரத்தில் ஒருவன் படம் வசூலில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால், எல்லா கடன்களையும் அடைத்து நல்ல லாபத்தை பார்த்தார் பந்துலு.
இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..