விஜயகாந்த் படத்தில் பொய் சொல்லி வசமாக சிக்கிய வீரபத்ரன்! வாங்கிய அடியை மறக்க முடியுமா?

Published on: September 20, 2023
viji
---Advertisement---

Actor Mansoot Ali Khan: தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு வித  உற்சாகம் தான் ஏற்படும். அந்தளவுக்கு தனது வீர வசனங்களால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தவர் விஜயகாந்த். நடிப்பையும் தாண்டி சமூகக் கருத்துக்களில் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.

சமுதாயம் சார்ந்த  அறப்போராட்டங்களில் வாகை சந்திர்சேகர், எஸ்.எஸ். சந்திரன் , ராதாரவி இவர்களுடன் விஜயகாந்தும் ஈடுபட்டிருக்கிறார். மக்கள் நலனே தன் நலன் என்று இன்றுவரை உண்மையாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: படம் வர்றதுக்கே நாக்கு தள்ளுது! ஆள விடுங்கடா சாமி – விக்ரம் சொன்ன ஐடியாவால் விழிபிதுங்கிய கௌதம்

இந்த நிலையில் விஜயகாந்துக்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையே ஒரு வித பந்தம் இருந்துகொண்டே இருக்கும். மன்சூர் அலிகான் யாரிடமாவது அடி வாங்கியிருக்கிறார் என்றால் அது விஜயகாந்திடம் மட்டும்தான். கழுதை அடி அடிப்பாராம் விஜயகாந்த்.

அப்படி அடி வாங்கி வாங்கியே இடுப்பு வலி வந்து விட்டதாக சமீபத்தில் ஒரு மேடையில் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். மேலும் கேப்டன் பிரபாகரன் படம் தான் மன்சூர் அலிகான் நடித்த முதல் படம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுதான் இல்லை.

இதையும் படிங்க: அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்!.. மேடையிலேயே ஓப்பனா சொன்ன இனியா!.

சத்யராஜ் நடித்த வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தில் அடியாள்களில் ஒருவராக நடித்திருப்பாராம் மன்சூர் அலிகான். ஆனால் இதற்கு முன் எந்த படத்திலயும் நடித்ததில்லை என்று சொல்லியே இப்ராஹிம் ராவுத்தரிடம் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

ஒரு நாள் வேலை கிடைச்சிருச்சு படத்தை இப்ராஹிம் ராவுத்தரும் வசனகர்த்தா லியாகத் அலிகானும் சேர்ந்து போய் பார்த்தார்களாம். அப்போதுதான் மன்சூர் அலிகானை படத்தில் பார்த்திருக்கிறார் இப்ராஹிம் ராவுத்தர்.

இதையும் படிங்க: ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…

மறு நாளே கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க உனக்கு வாய்ப்பில்லை எனக் கூறி விரட்டிவிட்டாராம். அதன் பிறகு லியாகத் அலிகான் வீரபத்ரன் கதாபாத்திரத்திற்கு தேவையான ஆடைகளை அணியவைத்து சில வசனங்களை பேச சொல்லி இப்ராஹிம் ராவுத்தரின் மனதை மாற்றி மன்சூரை நடிக்க வைத்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.