குந்தவைக்கு கெட்டிமேளம் ரெடி!… மலையாள மருமகளாகும் த்ரிஷா? வெளியான சூப்பர் தகவல்..

Published on: September 21, 2023
---Advertisement---

Trisha: தமிழ் சினிமாவில் பல வருடமாக ஆதிக்கம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது ட்ரெண்ட் வளையத்துக்குள் வந்து இருக்கிறார். இந்த நேரத்தில் மலையாள திரையுலகில் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

40 வயதாகும் த்ரிஷா 1999ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் வென்றார். அதன் பின்னர், த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எனக்கு 20 உனக்கு 18 படங்களின் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் வாசிங்க:பசியில் மயக்கமே வந்துட்டு!… இவங்க வண்டியில வந்து இத்தனை அசிங்கப்படணுமா?… கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..

இருந்தும் இந்த படங்களின் ரிலீஸ் தாமதமானதால் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே திரைப்படம் முதலில் திரைக்கு வந்தது. தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வந்த போதும் சாமி படத்தின் மூலம் தான் த்ரிஷா கோலிவுட்டின் கனவுக்கன்னி லிஸ்ட்டில் இடம்பிடித்தார். 

அதனையடுத்து தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். அவர்களின் படங்களே தொடர்ச்சிய நடிக்க வாய்ப்பும் கொடுக்கப்பட்டு வந்தது. தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

இதையும் வாசிங்க: ஏங்க இப்படியா அல்பமா இருப்பீங்க.. சேரன் மனைவியிடம் ப்ளீஸ் சொன்ன மிஷ்கின்… அப்பையும் ஏமாத்திட்டாரு!

ஆனால் கடைசியாக 96 படத்துக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் ஹிட் எதுவும் இல்லை என்பதால் த்ரிஷா அவ்வளவு தான் என விமர்சிக்கப்பட்டது. அடுத்த அதிரடியாக பொன்னியின் செல்வனில் மிரட்டலாக நடித்து தன்னுடைய இடத்தினை தக்க வைத்தார். இதனால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் குவிய தொடங்கி இருக்கிறது.  

இந்நிலையில், மலையாள சினிமாவை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நயன் ஸ்டைலில் இப்போதே திருமணம் செய்வது தான் நல்லது என நண்பர்கள் கொடுத்த அட்வைஸால் அம்மணி மண்டையை ஆட்டி இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.