விடாமுயற்சியில் கண்டிப்பா இதெல்லாம் வேணும்… அஜித் போட்ட கண்டிஷன்… முத நீங்க ஷூட்டிங் வாங்க!

Published on: September 22, 2023
---Advertisement---

Vidamuyarchi: அஜித் தன்னுடைய பைக் பயணத்தினை ஒரளவுக்கு முடித்து விட்டு அவரின் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் களமிறங்கி இருக்கிறார். தன்னுடைய இயக்குனருக்கு சில பல கண்டிஷன்களையும் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என கோலிவுட்டில் பிரச்னை களைக்கட்டி இருக்கிறது. ஆனால் அஜித் இதை கண்டுக்காமல் தன்னுடைய பைக் ட்ரிப்பினை நடத்தி வந்தார். அவரின் அடுத்த படத்தின் பெயர் விடாமுயற்சி என்ற பெயர் வெளிவந்தது தான் கடைசி அப்டேட். 

இதையும் படிங்க: 200 கோடி போச்சி!.. லியோ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!. ஜெயிலர தாண்டுறது கஷ்டம்தான்!..

அதற்கு அடுத்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை. விஜய் தன்னுடைய 68வது படத்தின் வேலைகளிலும் பிஸியாகி விட்டார். ஆனால் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் நகராமலே இருக்கிறது. இப்படத்தினை லைகா தயாரிக்க முதலில் இயக்க இருந்தது விக்னேஷ் சிவன்.

ஆனால், விக்கி சொன்ன கதையில் அஜித்துக்கு விருப்பம் இல்லை. தொடர்ச்சியாக சொன்ன ஓன்லைனில் உடன்பாடு இல்லாததால் அவரே படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோ நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. சமீபத்தில் அர்ஜூன் தாஸ் இப்படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ஆரவ் இப்படத்தில் எண்ட்ரி கொடுத்தார். 

இதையும் படிங்க: ‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு

இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. கடைசியாக இந்த மாத இறுதியில் அபுதாபியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் துபாயில் நடக்கும் கதையின் பேச்சுவார்த்தையில் அஜித் கலந்து கொண்டு இருக்கிறார். பைட் காட்சிகள் அதிக கவனம் செலுத்தவும், ஃபேன் இந்தியா படமாகவும் மாற்றவும் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கர்ட்ரஸ்ஸல் நடித்து 1997ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் ஹாலிவுட் படத்தின் கதையை வைத்தே விடாமுயற்சி தற்போது உருவாக இருக்கிறதாக கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.