‘ஜெயிலர்’ வெற்றி நெல்சனை தூக்கி விடும்னு பார்த்தா துரத்தி விட்டுருச்சு! அப்போ அவ்ளோதானா?

Published on: September 22, 2023
nelson
---Advertisement---

Nelson Next Plan: கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் இயக்குனர் நெல்சன். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி அதன் பிறகுதான் வெள்ளித்திரைக்கு வந்தார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் நெல்சன்.

எடுத்த முதல் இரண்டு படங்களால் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார். அந்தப் படங்களின் வெற்றியால் விஜயுடன் கூட்டணி சேர வாய்ப்பு வந்தது. அதை பயன்படுத்திக் கொண்டார் நெல்சன்.

இதையும் படிங்க: ‘ரஜினி171’க்கு பக்கா ப்ளான் போட்ட லோகேஷ்! ஒருத்தன் உள்ள வர முடியாது – இவங்க இருக்கும் போது என்ன பயம்?

பீஸ்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் ட்ரோலுக்கு உதவியாக இருந்தது. அந்தளவுக்கு பீஸ்ட் படத்தையும் நெல்சனையும் வச்சி செய்தார்கள் ரசிகர்கள்.

இதுவே நெல்சனுக்கு ஆறா வலியாக இருந்திருக்கும். இருந்தாலும் பீஸ்ட் படம் நல்ல ஒரு வசூலை பெற்றுத்தந்தது. அதனால்தான் ரஜினியுடன் கூட்டணி அமைக்க முடிந்தது. ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிப் பெற்று பெரிய அளவில் வசூல் சாதனையையும் பெற்றது.

இதையும் படிங்க: சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…

இதனால் நெல்சனின் சம்பளமும் பல மடங்கு எகிறியது. மேலும் நெல்சனின் அடுத்த பட ஹீரோ யாராக இருப்பார்கள் ? எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்ற ஆவலை ஏற்படுத்தியது. பட்ட அவமானங்களுக்கு அடுத்தடுத்த பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.சன் பிக்சர்ஸ் நிறுவனமும் நெல்சனுக்கு ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்து மீண்டும் ஒரு படம் பண்ணுவதற்கு வாய்ப்பு அளித்ததாக கூறப்பட்டது.

ஆனால் நெல்சனை தெலுங்கு சினிமாதான் அரவணைத்திருக்கிறது. அல்லு அர்ஜூன் நெல்சனுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என கேட்டிருக்கிறாராம். ஏற்கனவே அல்லு அர்ஜூன் புஷ்பா2வில் பிஸியால் இருப்பதால் ஒரு வேளை அந்தப் படம் முடிந்த பிறகு நெல்சனுடன் இணைய வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால் நெல்சனும் அல்லுஅர்ஜூனும் நிச்சயமாக கூட்டணி அமைக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் பிரபலம்.. நடுவில் புகுந்து குளறுப்படி செய்த எஸ்.ஜே.சூர்யா!

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.