
Cinema News
சேட்டன்களுக்கு விஜய் எப்போதுமே செல்லம்!… பத்திக்கிட்டு இருக்கும் பிரச்னையில் வைரலாக பரவும் ஜில்லா மேட்டர்!
Published on
By
Jilla Vijay: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், சேட்டன்கள் சிலர் ஆதரவு அலையையும் வீசத்தொடங்கி இருக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் ஆச்சரியமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். வரும் 30ந் தேதி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்…
இப்படத்திற்கு தற்போது கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மோகன் லால் குறித்து விஜய் ரசிகர்கள் தவறாக பேசியதால் வந்த பிரச்னையால் தற்போது கேரளாவில் #KeralaBoycottLeo ஹாஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. லாலேட்டன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என ஆபாச வார்த்தைகளால் பதிவுகளே அதிகரித்ததால் விஜயை குறித்தும் தற்போது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் விஜயும், மோகன் லாலும் இணைந்து நடித்த ஜில்லா படத்தின் டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்பது இயக்குனர் நேசனுக்கு கவலையாகி இருக்கிறது. லாலிடம் கேட்ட போது விஜயின் பெயர் தான் போட வேண்டும் என்றாராம்.
இதையும் படிங்க: குறைவான பட்ஜெட்டில் பெத்த லாபம்!. சன் பிக்சர்ஸ் கல்லா கட்டிய 3 திரைப்படங்கள்…
ஆனால் விஜய் கறாராக மோகன் லாலுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு அவர் பெயர் தான் முதலில் வர வேண்டும் என கண்டிப்பாக சொல்லி விட்டாராம். இதனை படத்தின் இயக்குனர் நேசன் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். தற்போது அந்த வீடியோவை வைராலாக்கி சேட்டன்கள் விஜயிற்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...