எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… வேதனையில் புலம்பும் மார்க் ஆண்டனி நடிகர்…

Published on: September 23, 2023
mark antony movie
---Advertisement---

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் மார்க் ஆண்டனி. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரிட்டு வர்மா, நிழல்கள் ரவி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

இத்திரைபடத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு தனி பெயரை பெற்று தந்தது. மேலும் இவரின் நடிப்பினாலேயே இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

இதையும் படிங்க:எல்லாமே நடிப்பா கோபால்… பிராக்டீஸ் பண்ணிட்டு ஸ்டேஜ் ஏறும் தளபதி.. ஸ்கிரிப்ட் தான் எல்லாமே!

எஸ்.ஜே.சூர்யா வாலி, நியூ, குஷி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரு காலத்தில் பெரிய அளவு வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு பின் பெரும்பாலான படங்கள் தோல்வியை சம்பாதித்து கொடுத்தன.

பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் சினிமா துறையில் நல்ல பெயரை சம்பாதிக்க ஆரம்பித்தார். பின் இவர் நண்பன், மெர்சல் போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க:சினிமா வரலாற்றிலேயே எடுக்காத ஒரு ஷார்ட்! அதுவும் இந்த நடிகருக்கா? ‘இறைவன்’ பற்றி ஜெயம் ரவி சொன்ன சீக்ரெட்

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நியூ, அன்பே ஆருயிரே போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் மிக பெரிய வெற்றியை கண்டதாகவும் மேலும் அக்காலத்தில் எப்படி இருந்த நான் பின் பல பட தோல்விக்கு பின் மீண்டும் மக்களிடையே நல்ல ஒரு பெயரை சம்பாதித்து வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மாதிரியான கம்பேக் கொடுத்த பின் பல ரசிகர்களும் தனக்கு நல்ல ஒரு வரவேற்ப்பை தந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும் தான் நடிக்கும் படங்கள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது முக்கியமில்லை எனவும் மக்களை திருப்திபடுத்துவதும் அவர்களை சந்தோஷப்படுத்து மட்டுமே தனக்கு முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இப்படியே போனா தொங்கவிட்டு அடிப்பானுங்க…! சந்திரமுகிக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை..! ஜகா வாங்கிய லாரன்ஸ்..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.