Connect with us

Cinema News

எல்லாமே நடிப்பா கோபால்… பிராக்டீஸ் பண்ணிட்டு ஸ்டேஜ் ஏறும் தளபதி.. ஸ்கிரிப்ட் தான் எல்லாமே!

Vijay Speech: விஜய் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாது பல பொது இடங்களில் பேசும் எல்லா பேச்சுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய ரகசியம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜயால் தான் இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே இத்தனை தூரம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய காலமாக விஜய் திரைப்படங்களின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் பேசும் பேச்சுக்களும், குட்டிகதைகளுக்கும் மிகவும் ரசிக்கப்பட்டது. பல ஒன்லைன்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகவும் பரவியது. இதனாலே விஜய் மேடை பேச்சுகளுக்கு ஃபேன்களும் அதிகமாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித்தா? விஜயா? கேட்ட கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன எஸ்.ஜே.சூர்யா – பழச மறக்காத ஆளுனு நிரூபிச்சிட்டாரு

பொதுவாக பெரும் பிரபலங்கள் மேடையில் பேசும் போது முன்கூட்டியே தயாராகி விடுவார்கள். சிலரோ என்ன பேச வேண்டும் என்பதை ஸ்கிரிப்ட்டாக எழுதி வாங்கி அதனை மனப்பாடம் செய்து அப்படியே பேசி விடுவார்கள். ஆனால் விஜய் இதற்கெல்லாம் ஒரு படி மேலே தான் எனக் கூறப்படுகிறது.

தான் மேடையில் பேச வேண்டிய ஸ்கிரிப்ட் வந்தவுடன் அதை கண்ணாடி முன்னாடி தொடர்ந்து பேசி பார்ப்பாராம். அதுமட்டுமல்லாமல் நிற்கும் தோரணை முதற்கொண்டு எல்லாத்தையுமே தயாராகி விட்டே மேடை ஏறுவாராம். சில விஷயங்களை கூட மிஸ் செய்யாமல் அப்படியே பழகிவிட்டே பொதுவெளிக்கு வருவாராம்.

இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் இவங்களுக்கு அழைப்பு கிடையாது… ஏ.ஆர்.ரஹ்மானால் விஜயிற்கு வந்த சிக்கல்…

அதனால் தான் வாரிசு நிகழ்ச்சியில் விஜயை சரத்குமார் அடுத்த சூப்பர்ஸ்டார் எனக் கூறும் போது சத்தமே இல்லாமல் இருந்து விட்டாராம். தெரியாமல் எதையாவது பேசி அது பிரச்னைக்கு வழிவகுத்துவிட கூடாது என்பதால் ஸ்கிரிப்ட்டில் உள்ளதை பேசிவிட்டு அமைதி காத்தாராம்.

இதனால் லியோ ஆடியோ ரிலீஸ் அதற்கெல்லாம் பதிலை தயார் செய்து விட்டு வந்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு எந்தவித பிரச்னையும் இருக்கக் கூடாது என்பதற்கு சில விஷயங்களை விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top