லியோ ஆடியோ ரிலீஸில் இவங்களுக்கு அழைப்பு கிடையாது… ஏ.ஆர்.ரஹ்மானால் விஜயிற்கு வந்த சிக்கல்…

Vijay Leo: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் விஜய் ரசிகர்களே சற்று கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தினை லலித் தன்னுடைய செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸுக்காக தயாரித்து இருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்தா? விஜயா? கேட்ட கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன எஸ்.ஜே.சூர்யா – பழச மறக்காத ஆளுனு நிரூபிச்சிட்டாரு

படத்தில் இரண்டு பாடல்கள் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் விநாயகர் சதுரத்தியில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் அனிருதின் பிஸியான வேலைகளால் பாடல் அன்று வெளியாகவே இல்லை.

இந்நிலையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் தான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 30ந் தேதி நடக்க இருக்கும் லியோ ஆடியோ ரிலீஸுக்கு இப்போதே ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். சில அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஐடியாவில் கூட இருந்தனராம்.

ஆனால் தற்போது அந்த ஆசைக்கெல்லாம் வேட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. லியோ ஆடியோ ரிலீஸில் விஜய் மக்கள் இயக்கத்தினை மட்டுமே அழைக்க வேண்டும். வேறு எந்த கலைஞர்களுக்கோ, ரசிகர்களுக்கோ அனுமதி கொடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட விஜயின் அரசியல் நிகழ்வுக்கான தொடக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இது என்னடா வெற்றிமாறன் யூனிவர்ஸா!.. விடுதலை 2வில் யாரெல்லாம் வரப்போறாங்க தெரியுமா?..

வக்கீல், மன்ற தலைவர்கள், மகளிர் அணி என பலரை தொடர்ச்சியாக சந்தித்து வரும் விஜய் இந்த நிகழ்ச்சியில் அவர்களை ஒன்றாக சந்திக்கும் போது புதிய விஷயமாக எதுவும் கூற வேண்டும். அதனால் சினிமாவை தாண்டிய நிகழ்வாக தான் லியோ ஆடியோ ரிலீஸ் இருக்கும் என்கின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியால் விஜயின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு இன்று வரை தமிழக அரசு அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இந்த தாமதம் விஜயை அழிக்கும் நோக்கத்தில் இல்லை என்றாலும் மீண்டும் ஒரு பிரச்னையை சமாளிக்க முடியாத நிலை உருவாகும். இதனால் அனுமதியை சற்று பொருத்தே கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story