Connect with us

Cinema News

இது என்னடா வெற்றிமாறன் யூனிவர்ஸா!.. விடுதலை 2வில் யாரெல்லாம் வரப்போறாங்க தெரியுமா?..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை 2 திரைப்படம் இப்போ வெற்றிமாறன் சினிமாட்டிக் யூனிவர்ஸாகவே மாறிவிடும் போல தெரிகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி முதன் முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கேரளா கோட்டைன்னு அதகளம் பண்ணது தான் காரணமா?.. மோகன்லால் ரசிகர்கள் இந்த பொள பொளக்குறாங்களே!..

அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு தான் விடுதலை 2 திரைப்படம் வெளியாகும் என்கிற தகவல் சோகத்தை கொடுத்தாலும், வெற்றிமாறன் கண்டிப்பாக தரமான சம்பங்களை செய்வார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

முதல் பாகத்தில் சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடித்திருந்த நிலையில், 2வது பாகத்தில் விஜய்சேதுபதிக்கும் ஒரு ஜோடியை வைத்து ஃபிளாஷ்பேக்கையும் வைத்து விட தீர்மானித்து விட்டார் வெற்றிமாறன். இந்நிலையில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..

மேலும், விசாரணை படத்தில் நாயகனாக நடித்த தினேஷும் தற்போது விடுதலை 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விடுதலை 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சு வாரியர் மற்றும் தினேஷ் உடன் வெற்றிமாறன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அப்படியே தனுஷையும் கேமியோ ரோலில் நடிக்க வைத்து விடுதலை பார்ட் 3க்கு கொண்டு போயிடுங்க வெற்றிமாறன் சார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top