Connect with us
kala

Cinema News

அவர பாக்குறதே கஷ்டம்! பாத்துட்டா? டான்ஸ் கத்துக்க வந்த அஜித்தை பற்றி கலா மாஸ்டர் கூறிய சூப்பரான தகவல்

Actor Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித் என்றாலே பிரமிப்பு என்பதை போல் மாறிவிட்டார் . ஏனெனில் அவரை பார்ப்பது என்பதே அரிதான விஷயமாக இருக்கின்றது. ரசிகர்களுக்கு மட்டுமில்லை. பிரபலங்களும் அஜித்தை அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாது என்றுதான் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிம் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார் அஜித். நேற்று கூட அவர் ஒரு ஹோட்டலில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது. அது அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் ஒரு நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சி. அதனால் அங்கு வந்திருந்தார் அஜித்.

இதையும் படிங்க: 17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..

அவரை பார்த்ததும் ரசிகர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்துக் கொண்டு வருவதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் அஜித்தை பற்றி பிரபல நடன இயக்குனர் கலா பேசிய ஒரு வீடியோ வைரலானது.

அஜித்தை பார்ப்பது என்பது கஷ்டம். ஆனால் பார்த்துவிட்டால் பல நாள் நெருக்கமானவர் போல பேசுவார் என்று கூறியிருந்தார். ஒரு நீண்ட கால நண்பர் இருந்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி உணர்வை நம்மிடையே ஏற்படுத்திவிட்டு போவார். அந்தளவுக்கு கலகலவென பேசிக்கொண்டே இருப்பார் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பிறகுதான் கவர்ச்சி நடிகைன்னு தெரியும்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்டே!..

ஒரு சமயம் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கலாவிடம் ஒரு மூன்று நாள் நடனம் கத்துக்க வந்தாராம் அஜித். ஆனால் அந்த தெலுங்கு பட இயக்குனர் ஒரு நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழக்க அந்தப் படம் அப்படியே நின்று போனது என கூறினார்.

அதன் பிறகு ஒரு விளம்பர படத்துக்காக மீண்டும் கலாவும் அஜித்தும் சந்திக்க நேர்ந்ததாம். அப்போதும் கலாஜி கலாஜி என அஜித் பேசிக் கொண்டே இருந்தாராம். ‘மிகவும் நல்ல மனிதர். அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களில் மற்றவர்களிடம் எந்த ஒரு ஈகோ பார்க்காமல் பழகுவதுதான்’ என்று கலா கூறினார்.

இதையும் படிங்க: துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top