Connect with us

Cinema News

துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், துருவ் விக்ரம் படத்தின் அறிவிப்பை பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அடுத்த நொடியே இயக்குனர் பாலா படத்தின் அறிவிப்பும் வெளியானது என்ன ஒரு டிசைன் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாக வேண்டிய துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை இயக்குனர் பாலா சரியாக இயக்கவில்லை எனச் சொல்லிவிட்டு மீண்டும் அதே கதையில் ஆதித்ய வர்மாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அஜித் நிலைமை தான் சியான் விக்ரம் மகனுக்குமா?.. பொறந்தநாளைக்கு போஸ்டர் வருவதோடு சரி!..

ஆதித்ய வர்மா வெளியான பின்னர் பாலாவின் வர்மா திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்காகவும் துருவ் விக்ரம் மிகப்பெரிய உழைப்பை போட்டு நடித்திருந்தாலும் அந்த இரண்டு படங்களும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

விஜய் தேவரகொண்டவை மிகப்பெரிய நடிகராக மாற்றிய படம்தான் அர்ஜுன் ரெட்டி. ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு அதே அர்ஜுன் ரெட்டியை ஹிந்தியில் கபீர் சிங் என ரீமேக் செய்து கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூலை பாலிவுட்டில் ஈட்டினர்.

இதையும் படிங்க: பேயிக்கு பேன் பார்க்கும் வடிவேலு!.. சந்திரமுகி 2 இப்படியொரு டிரைலருக்குத்தான் வெயிட்டிங்!

சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படம் சரியாக வரவில்லை எனக்கூறி சூர்யா மற்றும் நடிகை கிருத்தி ஷெட்டி அதிலிருந்து விலகிய நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் அப்டேட் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில் அது குறித்த அறிவிப்பை துருவ் விக்ரமின் பிறந்த நாளான இன்று பாலாவின் டீம் திட்டமிட்டு ரிலீஸ் செய்திருப்பதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.

வரும் செப்டம்பர் 25ம் தேதி காலை 10 மணிக்கு வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top