காக்க வச்சி கடுப்பாக்கிய கமல்!.. நல்லவனா இருந்தா பிடிக்காதே! ரூட்டை மாற்றிய சிம்பு..

Simbu: சிம்புவின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பத்து தல. தனது செகண்ட் இன்னிங்ஸில் சிம்பு அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை கொடுத்து ரசிகர்களை ஒரு உற்சாகத்தில் வைத்திருந்தார். நீண்ட நாளுக்கு பிறகு மாநாடு என்ற ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து சரியான கம்பேக்குடன் வந்து இறங்கினார்.

அந்தப் படத்திற்குப் பிறகு வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்து நானும் இனி போட்டிக்குத் தயார் என்று மாஸாக களத்திற்குள் குதித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுக்கு நூறாக்கியது ராஜ் கமல் நிறுவனம்.

இதையும் படிங்க: அடுத்து அந்த ஹீரோவை டிக் செய்த வேட்டையன் பட இயக்குனர்!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!…

10 தல படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இன்னும் அந்த படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது. ஆனால் அந்த படத்திற்காக சிம்பு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் சிம்புவுக்கு வாய்ப்பு கொடுத்தார் மணிரத்தினம். இப்போதைக்கு அந்த ஒரு படத்தில் தான் நடித்து வருகிறார் சிம்பு. ஆரம்ப காலங்களில் சிம்புவின் நடவடிக்கைகள் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் இயக்குனர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வர மாட்டார். நைட் ஷூட் என்றால் நோ சொல்லிவிடுவார்.

இதையும் படிங்க: கம்முனு சம்பளத்தை வாங்கிட்டு போயிருக்கலாம்!… இப்போ ஒன்னும் இல்லாம போச்சே!.. புலம்பும் விஷால்…

காலை நேர படப்பிடிப்பு என்றாலும் தாமதமாகதான் வருவார் என படக் குழுவை மிகவும் நோகடித்து வந்தார் சிம்பு. ஆனால் மாநாடு படத்திற்கு பிறகு இப்பொழுது வரை சரியான நேரத்திற்கு வருவது என்ன கேரக்டர் ஆனாலும் அதை திறம்பட நடித்துக் கொடுப்பது என முழுவதுமாக மாறிவிட்டார் சிம்பு. அப்படி மாறினாலும் அவருக்கான அந்த ஸ்கோப் இன்னும் சரிவர அமையவில்லை.

அதனால் ராஜ்கமல் நிறுவனத்தை நம்பி காத்திருந்தது தான் மிச்சம் என நினைத்த சிம்பு வெளியில் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டு வெளியான டைனோசர்ஸ் படத்தை இயக்கிய எம் ஆர் மாதவனிடம் சிம்பு ஒரு கதை கேட்டிருக்கிறாராம்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி நடந்த பிரச்னை என்ன? எதுக்காக வெளியேறினார் வெங்கடேஷ் பட்… ஷாக் தகவல்…

அந்தக் கதை மிகவும் பிடித்துப் போகவே அதை மேலும் டெவலப் செய்ய சொல்லி கேட்டிருக்கிறாராம். ஒரு வேளை அந்த கதை சிம்புவுக்கு பிடித்துப் போனால் இன்னும் ராஜ்கமல் நிறுவனம் தாமதப்படுத்தினால் தக் லைப் படத்திற்கு பின்பு சிம்பு நடிக்கும் திரைப்படமாக எம் ஆர் மாதவன் இயக்கும் திரைப்படமாகத்தான் அமையும் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

 

Related Articles

Next Story