தங்கலான் விக்ரமுக்கே டஃப் கொடுக்கும் கவின்!... நெல்சனின் முதல் படமே தாறுமாறா இருக்கே!...

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ் சினிமாவுக்கு வந்த சில நடிகர்களில் கவினும் ஒருவர். சினிமாவுக்கு வருவதற்கு முன் சில சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக கூட சில படங்களில் நடித்திருக்கிறார்.

பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் ஆகிய படங்களில் வருவார். அதன்பின்னர்தான் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்த படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கவில்லை. ஆனால், லிஃப்ட் படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

இதையும் படிங்க: அடுத்து அந்த ஹீரோவை டிக் செய்த வேட்டையன் பட இயக்குனர்!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!…

அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் சாண்டியுடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்காகவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்த்தார்கள். அந்த வீட்டில் இருக்கும்போதுதான் லாஸ்லியாவையும் காதலித்தார். ஆனால், ஒருகட்டத்தில் அது பிரேக்கப் ஆனது.

டாடா திரைப்படத்தின் வெற்றி கவினின் மார்க்கெட்டை அதிகரித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் கவின் அதிக சம்பளம் கேட்பதாகவும் செய்திகள் கசிந்தது. அதோடு, இளன் எனும் இளம் இயக்குனரின் இயக்கத்தில் அவர் ஸ்டார் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இப்படத்திற்காக கவின் போட்டிருக்கும் பெண் வேஷம்தான்.

இதையும் படிங்க: கம்முனு சம்பளத்தை வாங்கிட்டு போயிருக்கலாம்!… இப்போ ஒன்னும் இல்லாம போச்சே!.. புலம்பும் விஷால்…

ஒருபக்கம், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். பிலேமெண்ட் பிக்சர்ஸ் என்கிற பெயரில் அவர் தயாரிக்கவுள்ள முதல் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க விருக்கிறார். இந்த படத்திற்கு பிலடி பெக்கர் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை நெல்சனிடம் உதவியாளராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கவிருக்கிறார்.

bloddy

இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் வீடியோவை நெல்சன் வெளியிட்டிருக்கிறார். இந்த படத்தில் தலைப்பு பார்க்கும்போதே கவின் பிச்சைக்காரராக நடிக்க போகிறார் என்பது புரிகிறது. அதோடு, அவரின் தோற்றமும் தங்கலான் விக்ரமுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/C6gYQlXxfj2/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story