பேயிக்கு பேன் பார்க்கும் வடிவேலு!.. சந்திரமுகி 2 இப்படியொரு டிரைலருக்குத்தான் வெயிட்டிங்!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், மறைந்த நடிகர்களான மனோபாலா, ஆர்எஸ் சிவாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் உலக அளவில் ரிலீசாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மும்பையிலிருந்து அந்த நிகழ்ச்சிக்காக நடிகை கங்கனா ரனாவத் வந்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத்துக்கு சென்றிருந்தனர்.

இதையும் படிங்க: அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்!.. பளிச் அழகில் மனதை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

முன்னதாக வெளியான சந்திரமுகி 2 டீசர் ரசிகர்களை பெரிதளவில் கவராத நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் வடிவேலுவின் ஏகப்பட்ட காமெடிக் காட்சிகளை வைத்து கச்சிதமாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.

இந்த டிரைலருக்கு பிறகு சந்திரமுகி 2 படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கினால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை வேட்டையனாக ராகவா லாரன்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினிக்கு உரைக்கிற மாதிரி சொல்லுங்க! நடிகையை பற்றிய விஜய்சேதுபதியின் கருத்துக்கு ரசிகர்கள் கமெண்ட்

சந்திரமுகி படத்தில் ரஜினி மற்றும் வடிவேலு இடையில் நடைபெறும் பேய் பற்றிய விளக்கம் இன்றளவும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறது. அதே போன்ற ஒரு காட்சி சந்திரமுகி 2 படத்திலும் உள்ள நிலையில் அந்த காமெடி காட்சிகளையும் இந்த டிரைலரில் இடம்பெற செய்துள்ளனர்.

லாரன்ஸிடம் வடிவேலு பேய்க்கு வயசு ஆகுமா ஆகாதா? தலைமுடி நரைக்குமா நடக்காதா? எனக் கேட்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடைசியில், சந்திரமுகியும் வேட்டையனும் சண்டை போடும் காட்சியும் ட்ரைலரில் தெறிக்கிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it