Connect with us

Cinema News

அஜித் நிலைமை தான் சியான் விக்ரம் மகனுக்குமா?.. பொறந்தநாளைக்கு போஸ்டர் வருவதோடு சரி!..

சியான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் தன்னைப் போல சினிமாவில் கஷ்டப்படக் கூடாது என நினைத்து தனக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்த இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்த நினைத்தார்.

ஆனால், சேது சமயத்தில் இருந்த பாலா தற்போது இல்லை என்பதை வர்மா படத்தில் நடிக்கும் போது புரிந்து கொண்டார் துருவ் விக்ரம். முதல் படமே ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாலா இயக்கிய படத்தை விட்டுவிட்டு, அதே அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தை இன்னொரு இயக்குனரை வைத்து உருவாக்கி அதன்மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

இதையும் படிங்க: பேயிக்கு பேன் பார்க்கும் வடிவேலு!.. சந்திரமுகி 2 இப்படியொரு டிரைலருக்குத்தான் வெயிட்டிங்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தில் அப்பாவுக்கே வில்லனாக மிரட்டி இருந்தார் துருவ் விக்ரம்.

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியாகியது.

இதையும் படிங்க: எஸ்.ஜே சூர்யாவுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்த கதை தெரியுமா?!.. இவ்வளவு நடந்திருக்கா!..

ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமலே உள்ளது துரு விக்ரம் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கப் போவதாக வெளியான தகவல்கள் அப்செட் ஆக்கின.

இதையும் படிங்க: எல்லாம் ஒரு சூட்சமம்தான்! அடுத்தப்படத்திற்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித் – இதுக்குத்தான் அந்த புகழாரமா?

மாமன்னன் திரைப்படம் வெளியான நிலையில், துருவ் விக்ரம் படத்தை மாரிசெல்வராஜ் எப்போது துவங்குவார் என்கிற கேள்விகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது, துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு பா ரஞ்சித் தனது நீலம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம் தொடங்கும் என்கிற அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி போஸ்டர் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் அந்த படத்தின் சூட்டில் தொடங்காததை போல துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அறிவிக்கப்பட்டு தொடங்காமலே இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… வேதனையில் புலம்பும் மார்க் ஆண்டனி நடிகர்…

மாமன்னன் படத்தை விட படு மாசான படத்தை மாரி செல்வராஜ், சியான் விக்ரம் மகனுக்கு கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கபடி விளையாட்டை பின்புலமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top