அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?...

by சிவா |
anandaraj
X

80,90களில் தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராக கலக்கியவர்தான் ஆனந்தராஜ். ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது பீக்கில் இருந்த எல்லா நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும், விஜயகாந்த், பிரபு படம் என்றால் ஆனந்தராஜ் கண்டிப்பாக இருப்பார்.

anandraj

பெண்களை கற்பழிப்பது உள்ளிட்ட பல வில்லத்தனங்களை சினிமாவில் செய்தவர் அவர். விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தில் அசத்தலாக நடித்து சிறந்த வில்லன் நடிகர் விருதையும் வாங்கியவர் இவர். விஜயகாந்த் படங்களில் அவருக்கும், ஆனந்தராஜுக்கும் ஒன் டூ ஒன் பைட் கண்டிப்பாக இருக்கும். இது சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இதையும் படிங்க: அஜித்துக்கு காலின் பாதத்தில் உணர்வே கிடையாது!.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்…

ரஜினியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். பாட்ஷா படத்தில் அசத்தலான வில்லத்தனம் செய்திருப்பார். இப்போது காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார். சினிமாவில் வில்லத்தனம் செய்த ஆனந்தராஜுக்கு நடிப்பு கல்லூரியில் படிக்கும்போது வந்த காதல் பற்றி தெரிந்து கொள்வோமா!..

சென்னை தரமணி பகுதியில் இருந்த நடிப்பு கல்லூரிக்கு நடந்தே போவாராம் ஆனந்தராஜ். அந்த கல்லூரியின் அருகே ஒரு கேட்டரிங் பயிற்சி கல்லூரியும் இருந்தது. அதில், சைனா பட்லர் பெண் போல ஒருவர் படித்துவந்தார். அவர் முன்னே நடந்துபோக அவரை சைட் அடித்துக்கொண்டே பின்னால் போவாராம் ஆனந்தராஜ். அவரிடம் பேச வேண்டும் என மனதுக்குள் ஆசை. ஆனால், தைரியம் வரவில்லை.

jayashree

ஒருநாள் இயக்குனர் ஸ்ரீதர் நடிப்பு கல்லூரிக்கு வர ஆர்வத்துடன் காத்திருந்தார் ஆனந்தராஜ். ஆனால், அவர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரிக்கு சென்று ஆனந்தராஜ சைட் அடித்த அந்த சைனா பட்லர் பெண்ணை தேர்ந்தெடுத்து தனது படத்தில் நடிக்கை வைத்தார். அப்படி அவர் இயக்கிய படம் தென்றலே என்னை தொடு. அந்த நடிகை ஜெயஸ்ரீ.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் ஜெயஸ்ரீ. ஆனந்தராஜ் போராடி வாய்ப்புகளை பெற்று சினிமாவில் நுழையும்போது ஜெயஸ்ரீ வாய்ப்பு இல்லாமல் வெளியேறினார். எனவே அவருடன் நடிக்கும் வாய்ப்பு ஆனந்தராஜுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜெயஸ்ரீயின் கசின் சுகன்யாவுடன் நடித்தார் ஆனந்தராஜ்.

வில்லன் நடிகருக்குள் இருந்த ஒன் சைட் லவ் ஸ்டோரி இதுதான்!..

Next Story