latest news

அஜித்துக்கு காலின் பாதத்தில் உணர்வே கிடையாது!.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்…

சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமால் தானே வாய்ப்பு தேடி மேலே வந்தவர்தான் அஜித் குமார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க போய் அப்படத்தின் இயக்குனர் இறந்து, அந்த படமும் ஓடவில்லை. அதன்பின் அமராவதி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு கை கொடுத்தது. ‘அட பார்க்க அழகா இருக்கிறாரே’ என இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். தொடர்ந்து காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி பில்லா, […]

சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமால் தானே வாய்ப்பு தேடி மேலே வந்தவர்தான் அஜித் குமார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க போய் அப்படத்தின் இயக்குனர் இறந்து, அந்த படமும் ஓடவில்லை. அதன்பின் அமராவதி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு கை கொடுத்தது.

‘அட பார்க்க அழகா இருக்கிறாரே’ என இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். தொடர்ந்து காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி பில்லா, மங்காத்தா படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறி பல ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக மாறினார்.

இதையும் படிங்க: விருமாண்டி பார்ட் 2ல கமல் நடிக்கிறாரா?.. லீக்கான போட்டோவால் ன்ஃபியூஸான ரசிகர்கள்!..

பல வருடங்களாகவே விஜய்க்கு டஃப் கொடுக்கும் போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித்துக்கு நடிப்பு என்பது தொழில் மட்டுமே. ஆனால், பைக் ஒட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என அவருக்கு பல ஆர்வங்கள் உண்டு. கார், பைக் ஓட்டும்போது உடலில் பலமுறை அவருக்கு அடிபட்டிருக்கிறது.

முதுகில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், அவரின் உடலில் பல மாற்றங்களும் ஏற்பட்டது. அவருக்கு அடிக்கடி உடல் எடை கூடுவது கூட அதனால்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தை வைத்து ‘உன்னை தேடி’ என்கிற படத்தை இயக்கிய சுந்தர் சி அவரை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..

அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு காலில் உணர்வுகளே இல்லை. முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அப்படி ஆகிவிட்டது. நாம் காலில் ஒரு அடி எடுத்து வைத்தால் அதை நமது மூளை உணரும். அடுத்த அடி எடுத்து வைப்போம். ஆனால், அவருக்கு அந்த உணர்வு இல்லை. அவர் கீழே பார்த்துதான் நடக்க வேண்டும். ஒருநாள் சாலக்குடியில் படப்பிடிப்பு நடத்தினோம். தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும். அந்த தண்ணீர் ஜில்லென இருந்தது. எங்களால் நடக்கவே முடியவில்லை.

ஆனால், அஜித் சாதாரணமாக நடந்து வந்தார். ‘நீங்க ஹீரோதான். அதுக்காக இப்படியா?’ என சிரித்துகொண்டே கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்கு எதுவுமே தெரியல சார்’ என சொன்னார். இதையெல்லாம் மீறித்தான் அவர் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்’ என சுந்தர் சி சொல்லி இருக்கிறார்.

Author
Murugan ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

அஜித்துக்கு காலின் பாதத்தில் உணர்வே கிடையாது!.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்… | Cinereporters